இந்திய எல்லைக்குள் நுழைந்து பாகிஸ்தான் விமானங்கள் குண்டு வீசியுள்ளது. ஜம்மு காஷ்மீர் பகுதியில் நுழைந்து குண்டு வீசியுள்ளது. இந்திய ராணுவம் முகாமிட்டு இருந்த பகுதி அருகே வீசியுள்ளதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.
பாகிஸ்தான் நடத்திய இந்த தாக்குதலுக்கு இந்திய இராணுவம் நடத்திய பதில் தாக்குதலில், பாகிஸ்தானின் போர் விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தியதாக இந்திய ராணுவம் தகவல் வெளியிட்டுள்ளது.
அதேபோல், இந்தியா எல்லையில் நான்கு இடங்களில் தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் உறுதிப்படுத்தியுள்ளது. மேலும் பாகிஸ்தான் வெளியிட்டஅதிகாரப்பூர்வ அறிவிப்பில், பாகிஸ்தான் எல்லைக்குள் இன்று நுழைந்த இரு இந்திய போர் விமானங்களை சுட்டு வீழ்த்தபட்டுள்ளது.
வீழ்த்தப்பட்ட இரு விமானங்களில் ஒன்று பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீரின் கோஹி ரட்டா பகுதியில் விழுந்து உள்ளது. மற்றும் ஒரு போர் விமானம் இந்தியாவின் காஷ்மீர் பகுதிக்குள் விழுந்து உள்ளது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிக்குள் விழுந்த இந்திய போர் விமானத்தில் வந்த இரு விமானிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களில் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
கைதான மற்றொரு இந்திய விமானியிடம் நடத்திய விசாரணையில், தன்னுடைய பெயர் அபினந்தன் என்றும், விமானப்படையில் தனது பணி விமானப்படை விங் கமாண்டர் அதிகாரி என்றும், அடையாள எண் (service No) எண்: 27 981 என்று அபினந்தன் கூறும் வீடியோ மற்றும் அவரது புகைப்படங்களை பாகிஸ்தான் வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், பாகிஸ்தான் இராணுவத்திடம் சிக்கியுள்ள இந்திய இராணுவ விமானி அபினந்தன் சென்னையை சேர்ந்தவர் என்றும், தாம்பரம் ஏர் போர்ஸில் பயிற்சி பெற்றவர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. அபினந்தன் கேரளாவை பூர்விகமாக கொண்டவர் என்றாலும், சென்னையில் தான் தற்போது வசித்து வருகிறார்.
இதற்கிடையே பிடிபட்ட அபினந்தன் அவர்களை பாகிஸ்தான் இராணுவத்தினர் தாக்கும் காணொளியும் வெளியாகி இந்தியர்களை கடும் கோவத்தில் ஆழ்த்தியுள்ளது.
பாரா சூட்டில் இருந்து தப்பித்த அவினந்தனை காட்டு மிராண்டித் தனமாக.அடிக்கும்பாகிஸ்தான் பன்றிக்கூட்டம்..
Share பண்ணுங்க தமிழக மக்கள் அறியட்டும் நமக்காக அங்கு கஷ்டப்படும் நமது சகோதரனின் நிலையை.. pic.twitter.com/onRmG92910— ? Thillaigovindan ? (@Thillaigovind81) February 27, 2019