சர்க்கரை நோய் மற்றும், டயட்டில் உள்ளவர்கள் உபயோகிக்க வேண்டிய உணவு!

சர்க்கரை நோய் மற்றும், டயட்டில் உள்ளவர்கள் அதிகம் உபயோகிக்க வேண்டிய உணவு கோதுமை ஆகும். அதை வைத்து பக்கோடா எப்படி செய்வது என பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

கடலை மாவு – ஒரு கப், கப்,
கோதுமை மாவு – 2
அரிசி மாவு – அரை கப்,
வெங்காயம் – ஒன்று,
பச்சை மிளகாய் – 6,
இஞ்சி – சிறு துண்டு,
சமையல் சோடா – ஒரு சிட்டிகை,
கறிவேப்பிலை- சிறிதளவு,
கொத்தமல்லி – சிறிதளவு,
எண்ணெய்- சிறிதளவு,
உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

இஞ்சியை நன்றாக தோல் நீக்கி துருவி கொள்ளவும். பச்சை மிளகாயை , வெங்காயம், கொத்தமல்லி ஆகியவற்றை பொடிபொடியாக நறுக்கி எடுத்து கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, கோதுமை மாவு, கடலை மாவு ஆகியவற்றை கொட்டி அதனுடன் சிறிது கறிவேப்பிலை, பச்சை மிளகாயை , இஞ்சி, வெங்காயம், கொத்தமல்லி, சமையல்சோடா, உப்பு ஆகியவற்றை சேர்த்து பக்கோடா மாவு போல பிசைந்து கொள்ளவும்.

அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி பின்னர் மாவை சிறிது சிறிதாக எடுத்து போட்டு பொரித்து எடுத்து பரிமாறவும். சுவையான பக்கோடா ரெடி!!

சர்க்கரை நோய் உள்ளவர்கள் அதிகம் எண்ணெய் பொருட்களையோ அல்லது பிடித்த உணவுகளையோ உண்பது கடினம். இந்த பக்கோடா உண்மையில் அவர்களுக்கு பிடித்ததாகவும், ஆரோக்கியமாகவும் அமையும்.