இளம்பெண்களை காதல் வலையில் சிக்கவைத்து சீரழித்த கும்பல்.! அடுத்தடுத்து வெளியாகும் அதிர்ச்சி தகவல்!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருக்கும் பொள்ளாச்சியை சார்ந்த சபரிராஜன் மற்றும் அவனது நண்பர்கள் முகநூலின் மூலமாக பெண்களை வசியப்படுத்தி., அவர்களை பாலியல் பலாத்காரம் செய்து ஆபாச வீடியோ எடுத்த சம்பவம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டதில்., பல திடுக்கிடும் உண்மைகள் வெளியான வண்ணம் உள்ளது.

பொள்ளாச்சியில் இருக்கும் ஜோதி நகரை சார்ந்தவன் சபரிராஜன் என்கிற ரிசிவந்த் (வயது 25)., சூளேஸ்வரன்பட்டியை சார்ந்தவன் சதிஷ் (வயது 28)., பக்கோதிபாளையத்தை சார்ந்தவன் வசந்தகுமார் (வயது 24). இந்த வழக்கில் கைதான முதல் குற்றவாளியான சபரிராஜன் ஜவுளிக்கடையை நடத்தி வருகிறான். மேலும்., அவர் பொறியாளர் ஆவார்.

இவனின் நண்பரான பொள்ளாச்சி மாக்கினாம்பட்டியை சார்ந்த திருநாவுக்கரசு என்பவன் இந்த குழுவிற்கு தலைவனாக செயல்பட்டு வந்துள்ளான். வட்டிக்கு பணம் வழங்கி வரும் தொழிலை செய்து வரும் இவன்., கார் வாங்கியும் விற்பனை செய்தும் வந்துள்ளான். இவனிடம் பணியாற்றுபவன் வசந்தகுமார். இவர்கள் அனைவரும் சேர்ந்து கடந்த 2012 ம் வருடத்தின் தொடக்கத்தில் இருந்து தற்போது வரை சுமார் 100 க்கும் மேற்பட்ட இளம் பெண்களை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தும்., ஆபாச காட்சிகளை படமெடுத்தும் மிரட்டி வருகின்றனர்.

அழகான பெண்கள் மற்றும் மாணவிகளின் அலைபேசி எண்ணை திருநாவுக்கரசர் வாங்கி தரவே., அந்த எண்ணில் தொடர்பு கொண்டு சபரிராஜன் மாணவிகளிடம் பேசி ஆசை வார்த்தை கூறி., காதல் வலையில் விழவைப்பார். பின்னர் சம்பவ இடத்திற்கு செல்லும் சபரிராஜன் தனது பெயரை ரிசிவந்த் என்றும் கூறி இது தனது செல்ல பெயர் என்றும் கூறி வந்துள்ளார்.

இவர்களிடம் சிக்கும் பெண்களை அங்குள்ள ஆனைமலை அருகேயுள்ள சினப்பம்பாளையத்திற்கு அருகில் இருக்கும் திருநாவுக்கரசின் பண்ணை இல்லத்திற்கு அழைத்து சென்று கட்டாயப்படுத்தி பலாத்காரம் செய்வதும்., இந்த செயலை அவனின் நண்பர்கள் மறைந்திருந்து காட்சிகளாக படம் எடுத்து., பின்னர் அறைக்குள் சென்று வலுக்கட்டாயமாக கற்பழித்தும் வந்துள்ளனர்.

தற்போது வரை மொத்தம் 100 க்கும் மேற்பட்ட பெண்களின் வாழ்க்கையை சீரழித்து இருந்த நிலையில்., சுமார் 50 க்கும் மேற்பட்ட பெண்களின் காட்சி பதிவுகள் கிடைக்கப்பெற்றுள்ளது. மேலும், இந்த திட்டத்திற்கு மூளையாக செயல்பட்ட திருநாவுக்கரசு தலைமறைவாகியுள்ளதால் அவரை தீவிரமாக தேடும் பணியில் காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த விஷயம் குறித்து காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க சென்ற மாணவியின் சகோதரரை கொலை மிரட்டல் விடுத்த நபர்களையும் காவல் துறையினர் தீவிரமாக தேடி வருன்றனர். இந்த விஷயத்தில் இவர்கள் யாரும் வெளிவராத வண்ணம் வழக்குப்பதிவு செய்து தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வழக்கறிஞர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டி காவல் துறையினர் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று மனுவும் வழங்கப்பட்டுள்ளது