செய்யாத குற்றத்திற்கு 39 வருட தண்டனை.! இறுதியில் நீதி வென்று இழப்பீடாக வந்த பணம்.!!

அமெரிக்காவில் இருக்கும் கலிபோர்னியா மாகாணத்தை சார்ந்தவர் கிரேட் கோலே (வயது 71). இவர் கடந்த 1978 ம் வருடத்தில் தனது காதலியான ரோன்டா விசிட் மற்றும் அவரது மகன் டொனால்ட் (வயது 4) ஆகியோரை கொலை செய்துள்ளார் என்று தகவல் கிடைத்தது.

இந்த விஷயம் குறித்து தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து இறந்தவர்களின் பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு., நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர். நீதிமன்றத்தில் இவர் தாம் நிரபராதி என்று கூறி வந்தாலும்., குற்றம் சாட்டப்பட்டு உண்மை நிரூபணம் செய்யப்பட்டது என்று சுமார் 39 வருடங்கள் எந்த விதமான முன் ஜாமீனும் வழங்க முடியாத வகையில் சிறை தண்டனை அனுபவித்தார்.

இந்நிலையில்., கடந்த 2017 ம் வருடத்தின் போது கலிபோர்னியாவின் கவர்னர் ஜெர்ரி கருனை அடிப்படையில் வாதாடி விடுதலை செய்த பின்னர்., நிரபராதியான இவர் தனக்கு எதிராக நிரூபணம் செய்யப்பட்ட ஆதாரங்களை திரட்டி நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.

இதனைதொடர்த்து அவர் தொடர்ந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள் அவர் குற்றமற்றவர் என்பதை உறுதி செய்து சுமார் 21 மில்லியன் டாலர் (ரூ.150 கோடி) இழப்பீடாக வழங்கக்கூறி உதவிட்டனர். இந்த உத்தரவை அடுத்து இவருக்கு இழப்பீடு வழங்கப்ட்டது.