சில நாட்களுக்கு முன்னர் விழுப்புரம்- திண்டிவனம் சாலையில் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் காரில் சென்றிக்கொண்டிருந்தபோது தடுப்புச்சுவரில் கார் மோதிய கடும் விபத்து ஏற்பட்டது.
இதனையடுத்து காயமடைந்த அமைச்சர் ராஜேந்திரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் இருந்த நாடாளுமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் பலியானார்.
இதனை தொடர்ந்து வாழப்பாடி அருகே தனது காரில் அதிமுக எம்.பி காமராஜ் பயணித்துள்ளார். அப்போது, திடீரென காரின் டயர் வெடித்துள்ளது. இதனால், அமைச்சர் காமராஜ் சென்ற கார் தாறுமாறாக சென்று கவிழ்ந்துள்ளது. இதில் அவருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது.
இதை போலவே கரூர் அருகே ரெங்கநாதன் பேட்டையில் மறைந்தமுதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்க சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவைக்கு தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வந்தார்.
பின்னர் அங்கிருந்து கார் மூலம் பரமத்தி வழியே கரூர் செல்கையில் தென்நிலையில் இருந்து ஜல்லி ஏற்றிய லாரி ஒன்று எதிரில் வந்து காரின் பக்கவாட்டில் மோதியுள்ளது. இதில், காரின் முன்பக்க விளக்குகள் உடைத்தெறியப்பட்டது.
காரில் இருந்த அமைச்சர் மற்றும் அவருடன் இருந்தவர்கள் காயமின்றி உயிர்தப்பினர். பின்னர் அதே காரில் கரூர் வரை சென்ற அமைச்சர் விஜயபாஸ்கர் அங்கிருந்து மற்றொரு காரில் பொதுக்கூட்டத்திற்கு சென்றுள்ளார்.
தொடர்ந்து அதிமுகவினர் எதிர்பாராத விபத்துக்கு ஆளாகுவதால் அதிமுக கட்சியினர் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.