தாகம் எடுப்பது ஆபத்தானதா?

பிறந்த குழந்தைகள் முதல் உயிருக்கு ஊசலாடிக்கொண்டு இருக்கும் அனைவருக்கும்., இந்த உலகில் பிறந்த அனைவருக்கும்., அனைத்து விதமான உயிரினங்களுக்கும் இருக்கும் தாகம்…..

நமது உடலின் வெப்பத்தை சுற்றுசூழலில் இருக்கும் தட்ப வெப்ப நிலைக்கு ஏற்றாற்போல் வைத்திருக்கும் தன்மையானது இயற்கையின் வர பிரசாதம். இந்த உணர்வு நமது உடலின் நீர் குறையும் போது ஏற்படுகிறது.

நாம் இயல்பாக உணவு அருந்திய பின்னர்., உடற்பயிற்சி மற்றும் கடும் உடல் உழைப்பை கொண்டு இருக்கும் நேரத்தில்., அதிக வெயில் நேரத்தில் வெளியே சென்று வரும் சமயத்தில் இந்த தண்ணீர் தாகம் ஏற்படும். எவ்வுளவு உணவு சாப்பிட்டாலும் சிறிதளவு தண்ணீர் குடிக்காமல் இயல்பு நிலைக்கு திரும்பாது.

அடிக்கடி தொடர்ந்து தாகம் எடுத்துக்கொண்டு இருந்தாலும் நமது உடலில் எதோ பிரச்சனைக்கு அறிகுறியாக இருக்கலாம். சில நபர்களுக்கு சளி பிரச்சனை உண்டாகும் முன்னதாக அதிகளவில் தாகம் ஏற்படும். உடலில் இருக்கும் தேவையான திரவங்கள் சுரக்கப்படாமல் மற்றும் பற்றாக்குறை ஏற்படும் பட்சத்தில் உடலின் நீர்போக்கு குறைந்து அதிகளவில் தாகம் ஏற்படுகிறது.

நமது உடல் நிலை சரியில்லாமல் போவது., அதிக நேரம் வெயிலில் சுற்றுவது மற்றும் பணியாற்றுவது., அதிகளவில் வியர்வை சுரந்து வெளியேறுவது மற்றும் சிறுநீரின் சர்க்கரை அளவு அதிகமாக இருத்தல் போன்ற பிரச்சனையால் தாகம் ஏற்படுகிறது. எந்த விதமான காரணமும் இன்றி அதிகளவு தாகம் ஏற்படுவது சர்க்கரை நோயின் தாக்கமாக கூட இருக்கலாம்.