பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மை, அமைதி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் விதத்தில் இந்தியாவும் பாகிஸ்தானும் செயற்படவேண்டும் என இலங்கை வேண்டுகோள் விடுத்துள்ளது.
இலங்கை வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையொன்றிலேயே இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது.
காஸ்மீரை மையமாக வைத்து இடம்பெற்றும் சம்பவங்கள் குறித்து ஆழ்ந்த கவலையடைந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
மூன்று தசாப்த காலத்திற்கு மேல் ஈவிரக்கமற்ற பயங்கரவாததத்தை சந்தித்த நாடு என்ற அடிப்படையில் இலங்கை சமீபத்தில் காஸ்மீரில் இடம்பெற்ற தாக்குதலை எந்த வித தயக்கமும் இன்றி கண்டிக்கின்றது என தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சு அனைத்து விதமான பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்திற்கும் இலங்கை ஆதரவளிக்கின்றது எனவும் குறிப்பிட்டுள்ளது.
தென்னாசிய பிராந்திய அமைதி ஸ்திரதன்மை ஆகியவற்றிற்கும் பதற்றத்தை தணிப்பதற்கான நடவடிக்கைகளிற்கும் இலங்கை உறுதியான ஆதரவை அளிக்கின்றது எனவும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது