இந்திய விமானங்களை பாகிஸ்தான் படை வீழ்த்திய போது, பாகிஸ்தான் வீரர்கள் கொண்டாடி வீடியோ தற்போது வெளியாகி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் புல்மாவா மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 துணை இராணுவ வீரர்கள் பரிதாபமாக பலியாகினர்.
இதனால் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்திய இராணுவம் பாகிஸ்தான் எல்லையில் இருக்கும் தீவிரவாதிகளின் முகாம்களில் அடுத்தடுத்து தாக்குதல் நடத்தியது.
சுமார் 300-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகின. ஆனால் தீவிரவாதிகள் இறந்தது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இதுவரை வெளியாகவில்லை.
இது போன்ற பதற்றமான நிலையில் தான் பாகிஸ்தான் இராணுவம் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாகவும், அப்போது நடத்திய தாக்குதலில் பாகிஸ்தான் விமானங்கள் சுட்டி வீழ்த்தப்பட்டதாக கூறப்பட்டது.
#SayNoToWar#PakistanArmyZindabad #PakistanAirForceOurPride
THE CELEBRATIONS when Pak Air Force shot down 2 Indian fighter planes today pic.twitter.com/E0DKJ9joYe— Sana Javaid (@Sanajavaid510) February 27, 2019
இதையடுத்து தொடர்ந்து வந்த தகவல்களில் இந்திய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது உறுதியானது. அதுமட்டுமின்றி இந்திய விமானி ஒருவரையும் பாகிஸ்தான் சிறை பிடித்து வைத்துள்ளது. ]
சிறை பிடித்த இந்திய விமானியை பாகிஸ்தானியர்கள் அடிப்பது போன்ற வீடியோக்கள் வெளியானதால், இந்தியா மக்கள் கடும் கோபத்தில் உள்ளன. இது போன்ற நிலையில் தான் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் இந்தியாவை பேச்சு வார்த்தைக்கு அழைத்துள்ளார்.
இந்நிலையில் இந்தியாவின் இரண்டு விமானங்களை பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் துல்லியமாக தாக்கியதைக் கண்ட பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் துள்ளிக் குதிக்கும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.