வாஸ்து சாஸ்திரம் என்பது, ஒரு நிலத்தில் கட்டிடம் கட்டுவதற்குரிய முறைகளையும், அதன் தத்துவங்களையும் விளக்கும் ஒரு வேதம் சார்ந்த அறிவுத்துறை என்று சொல்லப்படுகின்றது.
வாஸ்து சாஸ்திரத்தின் பல்வேறு அம்சங்களையும் விரிவாக விளக்கிப் பல நூல்கள் பழைய காலத்திலேயே எழுதப்பட்டுள்ளன.
வாஸ்து சாஸ்திரத்தின் நோக்கம், மக்களுடைய நல்வாழ்வுக்காக அவர்களுடைய தேவைகளையும் எதிர்பார்ப்புக்களையும் பூத்திசெய்வதுடன், கட்டப்படுகின்ற கட்டிடம், மனிதன் இயற்கையுடனும், இப் பிரபஞ்சத்தின் ஒழுங்குடனும் இசைந்து போவதற்கு உதவுவதுமாகும்.
நாம் வீட்டில் சந்திக்கும் பல பிரச்சினைகளுக்கு வாஸ்து சரியில்லை என்று சிலர் கூறுவார்கள்.
அந்தவகையில் தென் மேற்கு, வடக்கு, வடகிழக்கு, தென் கிழக்கு திசைகளில் இருந்தால், பெரிய பிரச்சனைகள் ஏற்படும். இதன் பின்னணியில் பல ரகசியங்கள் அடங்கியிருக்கிறது. தற்போது அவை என்ன என்பதை பார்ப்போம்.
- வீட்டில் எந்த திசையிலாவது வெட்டு அல்லது வளைவுகள் இருந்தால் அது வீட்டை பாதிக்கும்.
- மிகவும் அடர்த்தியான வண்ணங்களை கொண்டு சுவற்றில் வர்ணங்களை பூசக்கூடாது. முக்கியமாக சிவப்பு மற்றும் செந்நீலம் நிறங்கள். இது நோயை உண்டாகும் சக்தியை தூண்டும்.
- தண்ணீர் அல்லது நீரூற்றின் படங்களை படுக்கையறையில் மாட்டக்கூடாது. இது உங்களை வெகுவாக பாதிப்புக்குள்ளாக்கும்.
- பூஜைப் பொருட்களை அல்லது கடவுள் படங்களை ஏதாவது உத்திரம் அல்லது நிலை அடுக்கின் கீழ் வைக்கக் கூடாது. அப்படி வைத்தால் அது மன அழுத்தத்தைத் தரும்.
- வடகிழக்கு மற்றும் வடக்கு திசைகளில் கனமான பொருட்களான பீரோவை வைக்கக்கூடாது. அது நம் பண விரயத்துக்கு தடை போடும்.
- போன்சாய் மரங்களை வீட்டினுள் வளர்க்காதீர்கள். அது நீங்கள் இருக்கும் துறையில், வளர்ச்சிக்குத் தடைபோடும்.
- வீட்டு தரையை வாரம் இரண்டு முறை, உப்புள்ள கடல் தண்ணீரால் துடைத்தால், வீட்டில் இருக்கும் எதிர்மறையான சக்திகள் ஓடியே போகும்.