இன்றைய கால பெண்கள் சருமம் அழகாக இருக்க வேண்டும் என பல வழிகளில் சருமத்திற்கு பல்வேறு பராமரிப்புக்களை மேற்கொள்வார்கள். அதில் ஒன்று தான் ப்ளீச்சிங் செய்வது.
ப்ளீச்சிங் செய்வதால், சருமத்தில் உள்ள கரும்புள்ளிகள், அழுக்குகள் போன்றவை முற்றிலும் வெளிவந்து, முகம் பொலிவோடு பளிச்சென்று இருக்கும்.
இருப்பினும் ப்ளீச்சிங்கை அடிக்கடி செய்து வந்தால், விரைவில் முதுமைத் தோற்றத்தைப் பெறக்கூடும்.
இதற்கு காரணம் ப்ளீச்சிங் செய்யப் பயன்படுத்தும் பொருட்கள் சருமத்தில் உள்ள எண்ணெய்களை முழுமையாக உறிஞ்சி கொள்ளும் இதனால் சீக்கிரம் முதுமைத் தோற்றத்தைப் பெற வழிவகுக்கும்.
அதுமட்டுமின்றி சருமம் மிகவும் சென்சிடிவ் என்றால், ப்ளீச்சிங் பொருட்கள், சரும அடுக்கினை மெதுவாக பாதித்து, நாளடைவில் சரும புற்றுநோயை உருவாக்கும் என சொல்லப்படுகின்றது.
ப்ளீச்சிங் செய்ய சருமத்தில் அக்கலவையைத் தடவும் போது ஒருவித எரிச்சல் மற்றும் அரிப்பு ஏற்படக்கூடும். இதனால் சருமம் எரிச்சல், அரிப்பை உணர நேரிடுகிறதோடு, அப்போது அந்த பொருளானது நம் சரும செல்களை அழித்து விடுகின்றது.
இதற்கு நாம் வீட்டில் கிடைக்கும் சில பொருட்களை கொண்டு இயற்கை முறையில் ப்ளீச்சிங் செய்ய முடியும். இதனால் எந்த பக்கவிளைவுமே ஏற்படாது. தற்போது அவற்றை பார்ப்போம்.
- 1 டேபிள் ஸ்பூன் தேனில், 1 1/2 டேபிள் ஸ்பூன் க்ரீம் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, முகத்தில் தடவி நன்கு உலர வைத்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.
- 1 சிட்டிகை மஞ்சள் தூளில், சில துளிகள் எலுமிச்சை சாறு மற்றும் ரோஸ் வாட்டர் கலந்து, முகத்தில் தடவி நன்கு காய வைத்து, வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவலாம்.
- 2 டேபிள் ஸ்பூன் பாலில், 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து பேஸ்ட் போல் வரும் வரை நன்கு கலந்து, முகத்தில் தடவி காய வைத்து, பின் நீரில் கழுவ வேண்டும்.
- ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் சந்தன பொடி, 2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு, 2 டேபிள் ஸ்பூன் வெள்ளரிக்காய் ஜூஸ் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தக்காளி ஜூஸ் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி நன்கு உலர வைத்து, பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.