இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி,இரண்டு 20 ஓவர் போட்டி, 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. கடந்த 24ம் தேதி விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று தொடரில் 1 க்கு 0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.
இந்த 20 ஓவர் போட்டி தொடரை சமன்செய்ய இந்திய அணி வென்றே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்தது. இந்தநிலையில் 20 ஓவர் போட்டி தொடரின் இரண்டாவது மற்றும் கடைசி போட்டி இன்று பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் தொடங்கியது.
இந்ந போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்த போட்டியில் இந்திய அணியில், துவக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மாவிற்கு ஓய்வளிக்கப்பட்டு ஷிகர் தவான் களமிறங்கினார். அதேபோல் வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவிற்கு பதிலாக சித்தார்த் கௌல் களமிறங்கினார்.
இந்தநிலையில் தொடக்க ஆட்டக்காரர்களாக லோகேஷ் ராகுலும் ஷிகர் தவானும் களமிறங்கினர். முதல் இரண்டு ஓவர்களில் 4 ரன்கள் மட்டுமே எடுத்தனர். இதனால் ரசிகர்கள் கடும் அதிர்ச்சியில் இருந்தனர். இதனையடுத்து லோகேஷ் ராகுல் சிறப்பாக ஆடி 47 ரன்கள் எடுத்து அவுட் ஆகி வெளியேறினார்.
இதனையடுத்து ஷிகர் தவான் 24 பந்துகளில் 14 ரங்களும், ரிஷப் பாண்ட் 6 பந்துகளில் 1 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட் ஆகி வெளியேறினர். பின்னர் கேப்டன் விராட் கோலி 38 பந்துகளில் தோனி இணைந்து இருவரும் அதிரடியாக ஆடி பந்துகளை பறக்கவிட்டனர். விராட் 38 பந்துகளில் 72 ரன்களும், தோனி 23 பந்துகளில் 40 ரன்களும் எடுத்தனர்.இறுதியில் 20 ஓவர்களின் முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 190 ரன்கள் எடுத்தது.
191 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி ஆரம்பத்திலிருந்தே சிறப்பாக ஆடியது. ஆஸ்திரேலிய அணியின் ஆர்கி சார்ட் 28 பந்துகளில் 40 ரன்களும், ஸ்டாய்னிஸ் 11 பந்துகளில் 7 ரன்களும், பின்ச் 8 பந்துகளில் 7 ரன்களும் எடுத்து அவுட் ஆகினர்.
ஆஸ்திரேலிய அணியின் மாக்ஸ்வெல் ஆரம்பத்திலிருந்தே அதிரடியாக ஆடி அபார சதம் அடித்தார். இவர் 55 பந்துகளில் 113 ரன்கள் எடுத்தார். இதில் 9 சிக்ஸர்களும், 7 பவுண்டரிகளும் அடங்கும். இவரின் அதிரடி ஆட்டத்தினால் ஆஸ்திரேலிய அணி 19.4 ஓவரில் 194 ரன்கள் எடுத்து அபார வெற்றிபெற்றது.