அபிநந்தனை எப்போது விடுவிப்போம்? பாகிஸ்தான் பரபரப்பு விளக்கம்

பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கியுள்ள விமானி அபிநந்தன் விடுவிக்கப்படுவது குறித்து பாகிஸ்தான் பேசியுள்ளது.

பாகிஸ்தானின் எப் -16 ரக போர் விமானத்தை துரத்திக் கொண்டு சென்ற போது, பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்த இந்திய விமானத்தை பாகிஸ்தான் ராணுவம் சுட்டு வீழ்த்தியது. இதில் தான் அபிநந்தன் பிடிக்கப்பட்டார்

விமானி அபிநந்தன் தமிழகத்தை சேர்ந்தவர். இவர் சென்னையில்தான் வசித்து வந்துள்ளார். இந்தநிலையில் சிறைபிடிக்கப்பட்ட இவரின் விடுதலைக்காக இந்தியா கடுமையான முயற்சிகளை எடுத்து வருகிறது

தற்போது அபிநந்தனை எப்போது வெளியே விடுவோம் என்று பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் குரேஷி விளக்கம் அளித்துள்ளார்.

அவர் தனது பேட்டியில், இந்தியா பாகிஸ்தான் இடையே கடுமையான பதற்றம் நிலவி வருகிறது. பாகிஸ்தானுக்கு இந்தியாவுடன் போருக்கு செல்ல விருப்பம் கிடையாது. இந்தியாவில் தாக்குதல் நடத்தவும் எங்களுக்கு விருப்பம் இல்லை.

இந்த பிரச்சனைகள் சரியாக வேண்டும் என்று காத்திருக்கிறோம். பிரச்சனைகள் சரியானால் இந்திய விமானியை விடுவிப்போம். போர் பதற்றம் தணிந்த பின் இந்திய விமானியை விடுவிப்போம், அவர் எங்கள் கஸ்டடியில் பாதுகாப்பாக உள்ளார் என கூறியுள்ளார்.