பிரித்தானியா, கனடா, அவுஸ்ரேலியா உள்ளிட்ட நாடுகளின் சுற்றுலாப் பயணிகள் நுழைவிசைவு இன்றி சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ள முடியும் என்று சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.
வரும் ஏப்ரல் மாதம் 1ஆம் நாளில் இருந்து- ஆறு மாதங்களுக்கு இந்த அறிவிப்பு நடைமுறையில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, தாய்லாந்து, பிரித்தானியா, அவுஸ்ரேலியா, தென்கொரியா, கனடா, அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா, நியூசிலாந்து மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் சுற்றுலாப் பயணிகள், நுழைவிசைவைப் பெறாமல், சிறிலங்காவுக்கு பயணம் மேற்கொள்ள முடியும்.
வெசாக், பொசன் பண்டிகைக் காலத்தில் சுற்றுலாப் பயணிகளை ஊக்குவிப்பதற்காக இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
சுற்றுலாத்துறை அமைச்சர் ஜோன் அமரதுங்கவினால் முன்வைக்கப்பட்ட இந்த யோசனைக்கு சிறிலங்கா அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.