அபிநந்தன் விவகாரத்தில் மத்திய அரசு அதிரடி முடிவு.!!

பாகிஸ்தான் இராணுவ போர் விமானங்கள் நடத்திய தாக்குதலில், இரண்டு இந்திய விமானங்கள் வீழ்த்தப்பட்டு, ஒரு விமானம் பாகிஸதான் எல்லையில் விழுந்தது, இதில் இந்திய இராணுவ போர் விமானி அபிநந்தன் பாகிஸ்தான் இராணுவத்தால் கைது செய்யப்பட்டார்.

இத்தனையடுத்து இந்திய இராணுவ போர் விமானி அபிநந்தன் அவர்களை மீட்க இந்திய அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அபிநந்தனை உடனே விடுவிக்க வேண்டும் என்று அமெரிக்கா, பிரான்ஸ், ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் பாகிஸ்தானுக்கு அழுத்தம் கொடுத்து உள்ளது. மேலும், இந்திய அரசும் பாகிஸ்தானுக்கு பல்வேறு வழிகளில் அழுத்தத்தை கொடுத்து உள்ளது.

எனவே இன்னும் ஒரு இரு நாளில் அபிநந்தன் நாடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே, அமெரிக்க தூதரக அதிகாரிகளிடம் அபிநந்தன் விரைவில் விடுவிக்கப்படுவார் என்று பாகிஸ்தான் தூதரகம் உறுதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், அபிநந்தன் விவகாரம் குறித்து ஓரிரு நாளில் முடிவெடுக்கப்படும் என்றும் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. அபிநந்தன் பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் உள்ளார் எனவும் தகவல் வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் விவகாரத்தில் பேச்சுவார்த்தைக்கே இடமில்லை என்றும், உடனடியாக அவரை இந்திய நாட்டுக்கு திருப்பி அனுப்பவே பாகிஸ்தானிடம் வலியுறுத்தி உள்ளோம் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் பயங்கரவாதிகள் மீது பாகிஸ்தான் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.