நேற்று பாகிஸ்தான் இராணுவ போர் விமானங்கள் நடத்திய தாக்குதலில், இரண்டு இந்திய விமானங்கள் வீழ்த்தப்பட்டு, ஒரு விமானம் பாகிஸதான் எல்லையில் விழுந்தது, இதில் இந்திய இராணுவ போர் விமானி அபிநந்தன் பாகிஸ்தான் இராணுவத்தால் கைது செய்யப்பட்டார்.
அவர் குறித்த புகைப்படங்கள், காணொளிகளை பாகிஸ்தான் நாடு அடுத்தடுத்து வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதில் கடைசியாக வெளிவந்த காணொளியில் அபிநந்தன் நன்றாக இருக்கும் செய்தி அனைவரையும் நிம்மதியடைய வைத்தது.
இத்தனையடுத்து இந்திய இராணுவ போர் விமானி அபிநந்தன் அவர்களை மீட்க இந்திய அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. மேலும் இந்திய தூதரகம் மூலம் பாகிஸ்தான் தூதரகத்திற்கு சம்மன் அனுப்பி உள்ளது.
இந்நிலையில், இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் விவகாரம் குறித்து ஓரிரு நாளில் முடிவெடுக்கப்படும் என்று பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், அபிநந்தன் பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் உள்ளார் எனவும் தகவல் வெளியிட்டுள்ளது.