தீர்ப்பு வந்த அதே வேளையில் தினகரன் எடுத்த புதிய முடிவு!

ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பிற்கு தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னம் ஒதுக்கியது தொடர்பான தினகரன், சசிகலா தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் இறுதி தீர்ப்பு சற்றுமுன் வழங்கபட்டது. டெல்லி உயர்நீதிமன்றத்தில் நான்கு நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த தீர்ப்பினை வழங்கியது.

தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கும் வழக்கில், டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இரட்டை இலை வழக்கில் 4 வாரத்திற்குள் முடிவெடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்த நிலையில், இன்று தீர்ப்பு வர இருப்பதாக நேற்று அறிவிக்கப்பட்டது. இரட்டை இலையை தினகரன் கைப்பற்றுவாரா? அல்லது ஓபிஎஸ் இபிஎஸ் தக்கவைப்பார்களா என்ற எதிர்பார்ப்பு எகிறியது.

இந்த நிலையில் ஓபிஎஸ் இபிஎஸ் க்கு இரட்டை இலையை தேர்தல் ஆணையம் வழங்கியது சரி தான் என டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தினகரன், சசிகலா தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு முடிவுக்கு வந்துள்ளது. அந்த வழக்குகளை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. ஆனால் தினகரன் தரப்பு தீர்ப்பு வந்த அதே வேளையில் நீதிமன்றத்தில் கோரிக்கை ஒன்றினை வைத்துள்ளார்.

குக்கர் சின்னம் கேட்டு மீண்டும் கோரிக்கை வைத்தார். அதனை ஏற்றுக்கொண்ட டெல்லி உயர்நீதிமன்றம் குக்கர் சின்னத்தை அடுத்த 15 நாட்களுக்கு யாருக்கும் ஒதுக்க கூடாது என தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டுள்ளார். அவருக்கு குக்கர் சின்னம் ஒதுக்குவது தொடர்பாக தேர்தல் ஆணையம் தான் முடிவெடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் ஏற்கனவே தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.