ஒசாமா பின் லேடனின் மகனை பற்றிய தகவல் கொடுத்தால் 1 மில்லியன் டொலர்கள் பரிசுத்தொகை வழங்கப்படும் என அமெரிக்க அரசு அதிரடி அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
அல்-கொய்தா தீவிரவாத அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடன் அமெரிக்க படையினரால் கொல்லப்பட்டு எட்டு ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன.
இந்த நிலையில் அமெரிக்க அரசு ஒரு அதிரடி அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அல்லது ஈரான் நாட்டில் வீட்டு காவலில் வைக்கப்பட்டிருக்கும் ஒசாமா பின் லேடனின் மகன் ஹம்ஸா பின்லேடன்(30) குறித்த தகவல் கொடுத்தால் 1 மில்லியன் டொலர்கள் பரிசுத்தொகை வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.
தற்போது அல்-கொய்தா தீவிரவாத அமைப்பின் முடிசூட்டப்பட்ட இளவரசன் என ஹம்சா அழைக்கப்பட்டு வருவதாகவும், வளர்ந்து வரும் பயங்கரவாதிகளால் முக்கியமானவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.