அதிகமான தலைப்பு செய்திகளில் இடம்பிடித்ததால் பயங்கரவாதிகளின் மனைவிகள் எப்பொழுது வேண்டுமானாலும் கொலை செய்துவிடுவார்கள் என பிரித்தானியாவில் இருந்து வெளியேறிய ஷமீமா, சிரியா முகாமில் இருந்து தப்பி சென்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
2015-ம் ஆண்டு தன்னுடைய 15 வயதில் பிரித்தானியாவில் இருந்து தப்பிய ஷமீமா பேகம் என்கிற மாணவி, சிரியாவில் குடியேறினார். அங்கு சென்றடைந்த 10 நாட்களிலே ரக்கா பகுதியில் யாகோ ரிட்ஜ் என்கிற பயங்கரவாதியை சந்தித்து திருமணம் செய்துகொண்டார்.
யாகோ ரிட்ஜ், நெதர்லாந்தில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் குற்றம் சுமத்தப்பட்டு தற்போது 6 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறான்.
இந்த தம்பதியினருக்கு பிறந்த இரண்டு குழந்தைகள் ஏற்கனவே இறந்துவிட்ட நிலையில், 2 வாரங்களுக்கு முன்பு பிறந்த ஜெராவுடன் ஷமீமா முகாமில் தனித்து வாழ்ந்து வருகிறார்.
அங்கு தன்னுடைய அனுபவம் மற்றும் வாழ்க்கை குறித்து ஷமீமா தொடர்ந்து தொலைக்காட்சி மற்றும் பத்திரிக்கைகளுக்கு பேட்டி கொடுத்து வருகிறார். இதனால் அவருடைய செயல்பாடு அனைத்தும் தங்களுக்கு எதிராக இருக்கிறது என நினைத்த பயங்கரவாதிகளின் மனைவிகள் நேரிடையாகவே கொலை மிரட்டல் விடுக்க ஆரம்பித்துள்ளனர்.
இதுகுறித்து வெளியாகியுள்ள செய்திக்குறிப்பில், ஷமீமா அங்கிருக்க பயந்து வருகிறார். அவர் இரண்டு முறை செய்தி தொலைக்காட்சிகளில் தோன்றியதால் அங்கிருந்தவர்கள் அவளுக்கு எதிராக சதி செய்ய ஆரம்பித்துவிட்டனர்.
அவளுடைய தலைக்கு விலையும் நிர்ணயித்து விட்டதால், தன்னுடைய குழந்தையின் உயிரை எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டும் என்ற நோக்கில் அங்கிருந்து தப்பிவிட்டாள்.
மிகுந்த துயரத்தில் இருக்கும் அவள், தன் மீது தவறு இருக்கிறது என குற்றம் சுமத்தி கொள்கிறாள். அவள் தன்னுடைய பிறந்த குழந்தையுடன் பிரித்தானியாவில் வசிக்கவே விருப்பம் தெரிவித்தாள். ஆனால் அவளுடைய குடியுரிமையை பிரித்தானிய அரசு நிராகரித்து விட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.