பெண் பிக்கு படுகொலை: பின் கணவன் தற்கொலை!

புத்தளம் குடா கும்புக்கடவல என்ற இடத்தில் பௌத்த பெண் பிக்கு ஒருவர் கூரிய ஆயதத்தால் குத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

அவருடைய கணவரால் இப்படுகொலை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

அவரது கணவரும் பின்னர் விசம் அருந்தி தற்கொலை செய்திருப்பதாகவும் பொலிசாரினால் மேலும் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் இருவரின் சடலைத்தையும் பிரேத பரிசேதனைக்காக வைத்தியசாலைக்கு பொலிஸார் அனுப்பிவைத்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து பொலிஸார் தெரிவிக்கையில் கணவன் – மனைவி இருவர்கிடையில் முரண்பாடு ஏற்பட்டிருக்க கூடும் அதன் காரணமாகவே இருவரும் உயிரிழந்து இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிப்பதாக கூறியுள்ளனர்.

மேலும் இச்சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணை மேற்கொண்டுவருகினறனர் என்பது குறிப்பிடத்தக்கது.