சிரியாவில் விமானப்படைத் தாக்குதலில் இடிந்து வீழ்ந்த கட்டடத்தில் இருந்து இரண்டு நாட்களுக்குப் பின் சிறுமி ஒருவர் மீட்கப்பட்டுள்ளார்.
வடமேற்குப் பகுதியில் உள்ள போராளிகளைக் குறிவைத்து அரசுத் தரப்பினர் கடந்த செவ்வாய்க்கிழமை விமானத் தாக்குதல் நடத்தியிருந்தனர்.
இதில் ஏற்கனவே சேதமடைந்த கட்டடங்கள் இடிந்து விழுந்ததுடன் இந்தத் தாக்குதலில் 3 சிறுமிகள் உட்பட 5 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், 5 வயதுச் சிறுமி ஒருவர் படுகாயங்களுடன் இடிபாடுகளுக்குள் சிக்கியிருப்பது இரண்டு நாட்களுக்கு பின்னர் தெரியவந்தது.
இதையடுத்து அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் பல மணி நேரப் போராட்டத்திற்குப் பின் சிறுமியை பாதுகாப்பாக மீட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதித்தனர்.