கடலூரில் மகன் ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டதை கேள்விப்பட்ட தாய் அதிர்ச்சியில் தூக்கில் தொங்கியுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் காத்தவராயன் (45) – ராஜலட்சுமி (40) தம்பதியினர். இவர்களுடைய மகன் விக்னேஷ் (20), தனியார் கல்லுரியில் முதலாமாண்டு படித்து வந்திருக்கிறான்.
தேர்விற்காக தன்னுடைய தாயிடம் பணம் கேட்டுள்ளான். ராஜலட்சுமியும் ஏ.டி.எம்.கார்டை கொடுத்து பணத்தை எடுத்துக்கொள்ளுமாறு கூறியுள்ளார்.
ஆனால் வாங்கி கணக்கில் போதிய பணமில்லாததால் ஆத்திரமடைந்த விக்னேஷ் வேகமாக வீட்டிற்கு வந்து தாயிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
பின்னர் அங்கிருந்து கிளம்பிய மகன் ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டதாக தகவல் கிடைத்துள்ளது. இதனை கேள்விப்பட்டு நீண்ட நேரம் கதறி அழுதுகொண்டிருந்த தாய், திடீரென வீட்டிற்குள் சென்று தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இந்த சம்பவம் அறிந்து வந்த பொலிஸார் இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மகன் இறந்த செய்தி கேட்டு அதிர்ச்சியில் தாயும் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.