பாகிஸ்தானில் கைது செய்யப்பட்ட அபிநந்தன் இன்னும் சில மணி நேரங்களில் விடுதலையாகவுள்ள நிலையில், அவரின் மருத்துவ அறிக்கை வெளியாகியுள்ளது.
பாகிஸ்தான் எல்லையில் விழுந்த இந்திய விமானி அபிநந்தன் பாகிஸ்தான் இராணுவத்தால் கைது செய்யப்பட்ட நிலையில், இன்று அவர் பிற்பகல் 12 மணிக்கு வாகா எல்லையில் ஒப்படைக்கப்படவுள்ளார்.
லாகூரிலிருந்து சாலை வழியாக வரும் அபிநந்தனுக்கு உடல்நிலை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அப்போது அவர் முழு ஆரோக்கியமாக இருப்பதாக மருத்துவர்கள் அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் அவரை வரவேற்பதற்காக முதலமைச்சர் கேப்டன் அம்ரீந்தர் சிங் வாகா செல்ல உள்ளனர். இதனால் பிரதமர் மோடியிடம் பஞ்சாப் முதலமைச்சர் கேப்டன் அம்ரீந்தர் சிங் அனுமதி கோரியிருக்கிறார்.
இதனால் வாகா எல்லையில் பாதுக்காப்பு தீவிரப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.