இன்று பலரும் அஞ்சி நடுங்கும் கொடிய நோய்களில் புற்றுநோய் முதலிடத்தை வகிக்கின்றது.
ஆரம்பத்திலேயே புற்றுநோயின் அறிகுறிகளை கண்டறிந்து சிகிச்சை மேற்கொண்டு வந்ததால், இறப்போரின் எண்ணிக்கை குறையும் என்று சொல்லப்படுகின்றது.
இன்று வரை புற்றுநோயை குணப்படுத்துவதற்கு மருந்துகள் கண்டுபிடிக்கபட்டு தான் வருகின்றது.
அந்த வகையில் மிகவும் பிரபலமான ரஷ்ய விஞ்ஞானியாக மெர்மெர்ஸ்கி புற்றுநோய்க்கு சமையலறையில் உள்ள பொருட்களைக் கொண்டே ஓர் சக்தி வாய்ந்த நாட்டு மருந்தைக் கண்டுபிடித்துள்ளார்.
இந்த மருந்தானது புற்றுநோயை குணப்படுத்துவது மட்டுமின்றி, உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்பெறச் செய்யும், மூளையின் செயல்பாட்டை மேம்படுத்தும், கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களை சுத்தம் செய்யும், இரத்த நாளங்களை சுத்தம் செய்யும் மற்றும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்று கூறுகிறார்.
அந்த நாட்டுமருந்தை அவர் புற்றுநோயாளிகளுக்கு பரிந்துரைக்கின்றார். தற்போது நாமும் அந்த நாட்டு மருந்தினை எப்படி தயாரிப்பது என்று தெரிந்து கொள்ளுவோம்.
தேவையான பொருட்கள்:
- எலுமிச்சை – 15
- பூண்டு – 12 பற்கள்
- தேன் – 1 கிலோ
- வால்நட்ஸ் – 400 கிராம்
- முளைக்கட்டிய கோதுமை – 400 கிராம்
தயாரிக்கும் முறை
முதலில் கோதுமையை நீரில் போட்டு மூடி வைத்து, இரவு முழுவதும் (குறைந்தது 12 மணிநேரம்) ஊற வைக்க வேண்டும்.
பின் அந்த நீரை வடிகட்டிவிட்டு, நன்கு கழுவிக் கொள்ள வேண்டும். பின் அதனை ஒரு கிண்ணத்தில் போட்டு, 24 மணிநேரம் தனியாக வைத்தால், கோதுமை முளைக்கட்டிவிடும்.
மிக்ஸியில் வால்நட்ஸ், பூண்டு, முளைக்கட்டிய கோதுமை ஆகியவற்றைப் போட்டு நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
அதேப் போல் 5 எலுமிச்சையை துண்டுகளாக்கி தோலுடன் மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்துக் கொண்டு, கோதுமை கலவையுடன் கலந்து கொள்ள வேண்டும்.
எஞ்சியுள்ள எலுமிச்சைகளை பிழிந்து சாறு எடுத்து, அதனுடன் சேர்த்துக் கொள்ளவும். இறுதியில் தேனை சேர்த்து நன்கு கலந்து, ஒரு குடுவையில் போட்டு அடைத்து, ஃப்ரிட்ஜில் 3 நாட்கள் வைக்க வேண்டும்.
இந்த மருந்தை தினமும் உணவு உண்ணும் முன் 2 டேபிள் ஸ்பூன் மற்றும் படுக்கைக்கு முன் 2 டேபிள் ஸ்பூன் என எடுத்து வாருங்கள்.
குறிப்பு
புற்றுநோய் இருப்பவர்களாக இருந்தால், சில 2 மணிநேரத்திற்கு ஒரு முறை 2 டேபிள் ஸ்பூன் உட்கொள்ள வேண்டும்.
இப்படி செய்து வந்தால், உடலின் மெட்டபாலிசம் அதிகரித்து, புற்றுநோய் செல்களை எதிர்த்துப் போராடும் சக்தி உடலுக்கு கிடைத்து, புற்றுநோயில் இருந்து விடுபடலாம் என்றும் சொல்லப்படுகின்றது.