அபிநந்தன் விடுதலை: உருக்கமான கோரிக்கை வைத்த பஞ்சாப் முதலமைச்சர்….

பாகிஸ்தானில் சிக்கியுள்ள இந்திய விமானியை நல்லெண்ண அடிப்படையில் விடுவிப்பதாக அந்த நாடு அறிவித்த நிலையில் பஞ்சாப் முதலமைச்சர் முக்கிய கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.

முன்னாள் ராணுவ படைத்தளபதியும் தற்போதைய பஞ்சாப் முதலமைச்சருமான அமரிந்தர் சிங் பிரதமர் மோடியிடம் அபிநந்தன் விவகாரத்தில் இந்த கோரிக்கையை வைத்துள்ளார்.

பஞ்சாபில் அமிர்தசரஸ் பகுதியில் அமைந்துள்ள அடாரி எல்லையில் அபிநந்தனை வரவேற்க தமக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என கோரியுள்ளார்.

பாகிஸ்தான் அரசு அதிகாரிகள் அபிநந்தனை வாகா எல்லையில் அல்லது அடாரி எல்லையில் வைத்து இந்திய அதிகாரிகளுக்கு கைமாற உள்ளனர்.

ஆனால் இந்திய அரசு கோரிக்கை வைத்தால் அடாரி எல்லையில் அவர்களை அபிநந்தனை ஒப்படைப்பார்கள் என கூறும் பஞ்சாப் முதலமைச்சர் அமரிந்தர் சிங்,

அபிநந்தனின் தந்தையும் தாமும் தேசிய பாதுகாப்பு அகாடமியின் முன்னாள் மாணவர்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக பஞ்சாப் எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுவரும் துணை ராணுவத்தினரை நேரில் சந்தித்து அவர்களுக்கு ஊக்கமளித்த முதலமைச்சர் அமரிந்தர் சிங் தமது டுவிட்டர் பக்கத்திலேயே பிரதமர் மோடிக்கு இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.