இந்தியாவிற்கு பேரதிர்ச்சி கொடுத்த பாகிஸ்தான்!

ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தலைவர் பாக்கிஸ்தானிலேயே இருப்பதாகவும், இந்தியா குற்றம்சாட்டுவதால் மாத்திரம் அவரை கைது செய்ய முடியாது எனவும் பாக்கிஸ்தானின் வெளியுறவு துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் இராணுவத்தால் சிறை பிடிக்கப்பட்ட இந்திய விமானி அபிநந்தன் வெள்ளிக்கிழமை (இன்றைய தினம்) விடுவிக்கப்படுவார் என, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அறிவித்திருந்தார்.

இதன் அடிப்படையில் இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்தில், இந்திய விமானி அபிநந்தனை பாக்கிஸ்தான் அதிகாரிகள் ஒப்படைத்துள்ளனர்.

இவ்வாறான நிலையில் இந்தியாவிற்கு பேரதிர்ச்சி தரும் வகையிலான மேற்படி செய்தியை பாக்கிஸ்தான் வெளியிட்டுள்ளது. வெளியுறவு துறை அமைச்சர் குரேஷி மேலும் கூறுகையில்,

ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசார் பாகிஸ்தானில் தான் இருக்கிறார். இந்தியா அவருக்கு எதிராக சரியான ஆவணங்களை சமர்ப்பித்து, அதனை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டால் அவரை உடனடியாக கைது செய்ய பாகிஸ்தான் தயாராக உள்ளது.

எங்களுக்கு கிடைத்த தகவல்படி, அசார் மிகுந்த உடல் நலக் குறைவாகவும், வீட்டை விட்டு வெளியேற முடியாமலும் இருக்கிறார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என தெரிய வந்துள்ளது.

எவ்வித ஆதாரமும் இன்றி, அசார் மீது இந்தியா குற்றம்சாட்டுவதால் மட்டும் கைது செய்ய முடியாது.இந்தியாவிற்கு எதிராக செயல்படும் எந்த அமைப்பையும் பாகிஸ்தான் ஆதரிக்கவில்லை.

எந்த ஒரு குற்றத்திற்கும், நடவடிக்கைக்கும் தகுந்த ஆவணம் தேவைப்படுகிறது. இது குறித்து நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தினால் மட்டுமே சரியான தீர்வை எட்ட முடியும் என கூறியுள்ளார்.