அபிநந்தனை விடுவிப்பதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு.! பாகிஸ்தான் நீதிமன்றம் அளித்த பரபரப்பு உத்தரவு.!

கடந்த மாதம் 14 ஆம் தேதி காஷ்மீரின் புலவாமா மாவட்டத்தில், பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாத அமைப்பு நடத்திய தாக்குதலில், இந்தியா துணை இராணுவ படையினர் 40 பேர் கொல்லப்பட்டனர். இதற்க்கு இந்திய போர் விமானங்கள் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது 6 குண்டுகளை வீசி தரைமட்டமாக்கியது. இதில் 300 மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

இதற்கு பதிலடி கொடுக்க நொந்த பாகிஸ்தான் போர் விமானங்கள் இந்திய இராணுவ தளவாடங்கள் மீது தாக்குதல் நடத்த முற்பட்டது. அப்போது தயாராக இருந்த இந்திய போர் விமானங்கள் பதில் தாக்குதல் நடத்த, பாகிஸ்தான் போர் விமானங்கள் தலைதெறிக்க ஓடின. இந்த சம்மபவத்தில் ஒரு பாகிஸ்தான் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. இந்திய இராணுவ விமானி அபிநந்தன் பாகிஸ்தான் இராணுவத்தால் கைது செய்யப்பட்டார்.

இதனால், எல்லையில் போர் பதற்றம் அதிகரித்தது. இதற்கிடையே பாகிஸ்தான் பிடித்துவைத்த அபிநந்தனை மீட்க இந்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. மேலும், அபிநந்தனை உடனடியாக இந்தியாவிடம் ஒப்படைக்கவேண்டும் என்றும் அறிவிப்பு வெளியிட்டது. உலக நாடுகளும் கடும் அழுத்தம் கொடுக்க ஆரம்பித்தது.

இந்த நிலையில், நேற்று பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் பேசிய அண்னண்ட்டு பிரதமர் இம்ரான் கான், ””பதற்றத்தை அதிகரிப்பது யாருக்கும் பயன்தராது. அமைதியை விரும்பும் நல்லெண்ண அடிப்படையில் இந்திய விமானி அபினந்தன் நாளை விடுவிக்கிறேன்” என்று அறிவித்தார். வேறு எந்த காரணத்தையும், விடுவிக்க எந்த நிபந்தனையும் வைக்காமல், அமைதியை விரும்பும் நல்லெண்ண அடிப்படையில் இந்திய விமானி அபினந்தன் நாளை விடுவிக்கிறேன்” என்று மட்டும் அறிவித்துள்ளார். இதனை இந்திய அரசும் உறுதி செய்தது.

இதனையடுத்து, அபினந்தன் ராவல்பிண்டியில் இருந்து விமானம் மூலம் லாகூருக்கு கொண்டு வரப்பட்டார். பின் அங்கிருந்து இன்று மதியம் வாகா எல்லைக்கு கொண்டு வரப்பட்டு, இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனை விடுவிப்பதற்கு எதிராக பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் ஒருவர், பாக்., இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை சற்றுமுன் விசாரணை செய்த இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டு உள்ளது.

தற்போது வெளியான தகவலின் படி, அபிநந்தன் அவர்கள், இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் லாகூர் வந்தடைந்து உள்ளதாகவும், இன்னும் சிறிது நேரத்தில் வாகா எல்லைக்கு புறப்பட உள்ளார் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.