தாய் மண்ணில் அபிநந்தன் கால்பதித்த போது, எல்லையில் அரங்கேறிய புதிய வரலாறு.!

இரண்டு தினங்களுக்கும் முன் பாகிஸ்தான் போர் விமானங்களை எல்லையில் இந்திய போர் விமானங்கள் விரட்டி அடித்தன. இந்த தாக்குதலின் போது இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபினந்தனை பாகிஸ்தான் சிறைப்பிடித்தது.

இதனையடுத்து இந்திய அரசு மற்றும் உலக நாடுகள் கொடுத்த அழுத்தத்தின் காரணமாகவும், ஜெனிவா ஒப்பந்தத்தின்படியும், போர்க் கைதியாக பிடிபட்டுள்ள அபினந்தனை பத்திரமாக இந்தியாவிடம் ஒப்படைக்கபடுவதாக பாகிஸ்தான் அரசு நேற்று அறிவித்தது.

அதன்படி, அபினந்தன் ராவல்பிண்டியில் இருந்து விமானம் மூலம் லாகூருக்கு கொண்டு வரப்பட்டு, பின் அங்கிருந்து இன்று மதியம் வாகா எல்லைக்கு கொண்டு வரப்பட்டு, இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.

பல தடைகளை தாண்டி இந்தியா வந்தடைந்துள்ள அபிநந்தனுக்காக, வாகா – அட்டரி எல்லையில் வழக்கமாக மாலையில் நடக்கும் கொடி இறக்கும் நிகழ்வு இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் வாகன எல்லையில் பொதுமக்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இத்தனை ஆண்டுகளில் வாகா எல்லையில் நடக்கும் கொடி இறக்கும் நிகழ்வு ரத்து செய்யப்பட்டு இருப்பது இதுவே முதல்முறை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.