காரசாரமான மிளகு உருளைக்கிழங்கு பொறியல்.!

இன்றளவில் இருக்கும் குழந்தைகள் அதிகளவில் விதவிதமான உணவு பொருட்களை விரும்பி சாப்பிடுகின்றனர். அந்த வகையில்., பல விதமான உணவுகளை அவர்கள் சாப்பிட தூண்டும் வகையில் சமையலில் விதவிதமான உணவு பொருட்களை செய்து வழங்குவது நல்லது. அந்த வகையில்., நாக்கில் எடுத்து வைத்தவுடன் எச்சில் வரவழைக்கும் மிளகு உருளைக்கிழங்கு பொறியல் செய்வது எப்படி என்பதை காண்போம்.

மிளகு உருளைக்கிழங்கு பொறியல் செய்வது எப்படி:

உருளைக்கிழங்கு – 1/4 கிலோ.,
இஞ்சி பூடு பேஸ்ட் – 3 தே.கரண்டி.,
எண்ணெய் – 5 தே.கரண்டி.,
கடுகு – 1 தே.கரண்டி.,
மிளகு தூள் – 1 தே.கரண்டி.,
சீரகம் – 1 தே.கரண்டி.,
கறிவேப்பில்லை – சிறிதளவு.,
உப்பு – தே.அளவு..

மிளகு உருளைக்கிழங்கு பொறியல் தயாரிக்கும் முறை:

எடுத்துக்கொண்ட உருளை கிழங்கை நன்றாக அவித்து கொண்டு தனியாக தோலுரித்து எடுத்து கொள்ளவும்.

அந்த உருளைக்கிழங்கை தோலை சுத்தமாக நீக்கிவிட்டு சிறுசிறு துண்டுகளாக வெட்டி எடுத்து கொள்ளவும்.

வானெலியில் எண்னையை ஊற்றி., கடுகு., சீரகம் மற்றும் கறிவேப்பிலையை சேர்த்து வழக்கமான முறையில் தாளித்து எடுத்துக்கொள்ளவும்.

அனைத்தும் நன்றாக வதங்கிய பின்னர் இஞ்சி போன்று பேஸ்டை சேர்ந்து நன்றாக வதக்கி., உருளைக்கிழங்கை போட்டு பிரட்டி எடுக்கவும்.

அதில் சிறிதளவு உப்பு சேர்த்த பின்னர் மிளகு தூளை தூவி., நன்றாக கிளறினால் சூடான சுவையான மிளகு உருளைக்கிழங்கு பொறியல் தயார்.