விடுதலையாகும் இறுதி நேரத்தில் அபிநந்தனுக்கு நேர்ந்த கொடுமை?

இந்திய மீடியாக்கள் உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிட்டு வருவதாக அபிநந்தன் பேசியிருக்கும் வீடியோ காட்சி வெளியாகி இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான் ராணுவத்தால் கைது செய்யப்பட்டு 70 மணி நேரம் சிறைகைதியாக இருந்த இந்திய ராணுவ வீரர் அபிநந்தன், இன்று இந்தியாவிடம் ஒப்படைக்கப்படுவார் என அந்நாட்டு பிரதமர் அறிவித்திருந்தார்.

அதன்படி மாலை 5.20 மணிக்கு அபிநந்தனை பாகிஸ்தான் ராணுவத்தினர் அழைத்து வந்தனர். அங்கு பலதரப்பட்ட சோதனைகளுக்கு பின்பு இரவு 9.20 மணிக்கு இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

அடுத்த சில நிமிடங்களில் பாகிஸ்தான் தொலைக்காட்சிகளில், இந்திய மீடியாக்களை விமர்சித்து அபிநந்தன் பேசும் வீடியோ ஒன்று வெளியானது.

அந்த வீடியோவில். இந்திய ஊடகங்கள் எப்போதும் ஒரு விசயத்தை பெரிது படுத்தியே காட்டுகிறது. ஒரு சிறிய விடயத்தை கூட நெருப்பில் எண்ணை உற்றுவது போல, மசாலா எல்லாம் கலந்து காட்டுவார்கள். அதிலேயே மக்கள் உணர்ச்சி வயப்பட்ட நிலைக்கு தள்ளப்பட்டு விடுகிறார்கள் என கடுமையாக பேசியிருந்தார்.

இந்த வீடியோவானது அபிநந்தனை விடுதலை செய்வதற்கு முன்பு கட்டாயப்படுத்தி, கொடுமைப்படுத்தி எடுத்ததாக கருத்துக்கள் பரவிய வண்ணம் உள்ளன.

முன்னதாக அபிநந்தன் கைது செய்யப்பட்ட சமயத்தில் சில ஊடங்கள் பொதுமக்களை தூண்டும் விதத்தில் கருத்து வெளியிடுவதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.