எல்லையில் அபிநந்தனை அழைத்துவர சென்ற வீரரின் பெயர் தெரியுமா?

இந்தியா – பாகிஸ்தான் இடையில் இருக்கும் வாகா எல்லையில் இருந்து அபிநந்தனை அழைத்து வர சென்ற ராணுவ வீரரின் பெயர் பிரபாகரன் என்பது பெருமையாக இருக்கிறது என தமிழர்கள் பலரும் இணையதளத்தில் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்.

பாகிஸ்தான் எல்லையில் சிக்கிக்கொண்ட தமிழகத்தை சேர்ந்த இந்திய ராணுவ வீரர் அபிநந்தன், 70 மணி நேரசிறைகைதிற்கு பின்னர் இன்று இந்தியாவிடம் ஒப்படைக்கபடுவார் என அந்நாட்டின் பிரதமர் இம்ரான்கான் அறிவித்திருந்தார்.

அதன்படி வாகா எல்லையில் ஆயிரத்திற்கும் அதிகமான பொதுமக்கள் கூடி அபிநந்தனின் வரவிற்காக காத்திருந்தனர். இதனால் அப்பகுதியே பெரும் பரபரப்பாக காணப்பட்டது.

6 மணிக்கெல்லாம் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டு விடுவார் என பலரும் எதிர்பார்த்துக்கொண்டிருந்த நிலையில், அனைத்து வகையான சோதனைகளையும் முடித்துவிட்டு இரவு 9.20 மணிக்கு இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

அவரை அழைத்து வருவதற்காக இந்தியாவின் சார்பில் ஏர் வைஸ் மார்ஷல் பிரபாகரன் சென்றார். இந்த பெயரை கேள்விப்பட்ட தமிழர்கள் பலரும் தற்போது உற்சாகத்துடன் கருத்துக்களை இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.