பிரித்தானியாவில் விமானம் புறப்பட்ட சில விநாடிகளிலே எழுந்த பயங்கரமான வெடி சத்தத்தில் 8 பயணிகள் காயமடைந்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
லாதமோஷன் விமானம் பிரித்தானியாவில் இருந்து ஆஸ்திரியா நோக்கி 169 பயணிகளின் மாற்று 6 விமான குழுவினருடன் இரவு 8 மணிக்கு மேல் புறப்பட்டுள்ளது.
புறப்பட்ட சில வினாடிகளில் பயங்கரமான வெடி சத்தம் கேட்டுள்ளது. அதனை தொடர்ந்து தீப்பொறிகள் பறந்துள்ளது. இதனை பார்த்த பயணிகள் அனைவரும் அலற ஆரம்பித்துள்ளனர்.
இதனையடுத்து உடனடியாக விமானம் நிறுத்தப்பட்டு அவசரகால சரிவு வழியே வேகமாக பயணிகள் வெளியில் இறக்கப்பட்டனர்.
பின்னர் இதுகுறித்து விமான நிர்வாகம் கூறுகையில், எஞ்சினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் இறக்கிவிடபட்டனர். 8 பேர் லேசான காயங்களுடன் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளது.