பார்வைத் திறனை பாதுகாக்கும் வழிகள்!

கணினி, தொலைபேசி, தொலைகாட்சி ஆகிய மின்சாதனப் பொருட்களை அளவுடன் பயன்படுத்த வேண்டும். அதனால் வரும் வெளிச்சத்தைக் குறைத்துக்கொள்வது நல்லது. அடிக்கடி கண்களைச் சிமிட்டுவதால், கண்ணின் ஈரப்பதம் தக்கவைக்கப்படும். இதனால் பார்வைத் திறனை பாதுகாக்கலாம்.

  • 7 முதல் 8 மணி நேரம் தூங்குவது நல்லது. அதாவது 4 மணி வரை ஆழ்ந்த தூக்கம் அவசியம். அதாவது, அந்த நேரத்தில் மெலோடனின் சுரக்கும். இது உடலுக்கு நல்லது. சீரான தூக்கம் இருந்தால், உடல் மற்றும் கண்களுக்கு ஓய்வு கிடைக்கும். ஐ ஸ்ட்ரெஸ், எரிச்சல் போன்றவை மறையும்.
  • தினமும் இரண்டு முதல் இரண்டரை லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும். இது உடல் மற்றும் கண்களை வறட்சித் தன்மையில் இருந்து பாதுகாக்கும்.
  • கேரட்டில் வைட்டமின் ஏ சத்து அதிகம் உள்ளதால், பார்வைத் திறனை பாதுகாக்கும் சக்தி அதற்கு உண்டு. ஆனால், கேரட் சாப்பிடுவதன் மூலம் இழந்த பார்வைத்திறனை மேம்படுத்த முடியாது.
  • உள்ளங்கையில் சுத்தமான தண்ணீரை ஏந்தி, அதில் கண்களை வைத்து 10 முறை கண் சிமிட்டுங்கள். அதிலுள்ள தூசு, அழுக்கு, அழுத்த உணர்வு நீங்கி கண் புத்துணர்வு பெறும். இதை தினமும் செய்துவருவது நல்லது.
  • கண்களை பாதுகாக்க தொலைக்காட்சிக்கு அருகில் உட்கார்ந்து பார்க்காதீர்கள். உங்கள் தொலைக்காட்சியின் செங்குத்தான உயர அளவு 10 அங்குலம் இருந்தால் நீங்கள் 10 அடி தொலைவில் இருந்து டி.வி. பாருங்கள்.
  • மங்கலான வெளிச்சத்தில் புத்தகங்களை படிக்காமல், பின்புறத்தில் இருந்து விளக்கின் வெளிச்சம் பிரகாசமாக புத்தகத்தின் மீது விழும் நிலையில் படிப்பது எளிதாக இருக்கும்.
  • பார்வைத்திறனை அதிகரிக்க, வெள்ளையான சுவரைப் பார்த்து, தலையை அசைக்காமல், திருப்பாமல் கண்களால் 8 போட வேண்டும். இதுபோல, 5 முறை பயிற்சி செய்தாலே கிட்டப் பார்வை, தூரப் பார்வை பிரச்னை சிறிது சிறிதாகக் குறையும்.
  • தினமும் இருவேளையாவது உள்ளங்கைகளைவைத்து, கண்களைப் பொத்திக்கொண்டு, கண்கள் மூடியபடி இருக்க வேண்டும். கருவிழியை மட்டும், எந்தளவுக்கு முடியுமோ அந்தளவுக்கு பக்கவாட்டில் பார்க்க வேண்டும். இதுவும் ஒரு கண் பயிற்சிதான். இதனால், கண்களின் தசைப் பகுதியில் ஏற்பட்ட அழுத்தம் குறையும்.