வாகா எல்லைக்கு கொண்டு வரப்பட்ட அபிநந்தனுடன் பாகிஸ்தான் வீரர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தானால் சிறைவைக்கப்பட்ட அபிநந்தன் இன்று மாலை வாகா எல்லையில் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார்.
இதை எல்லையில் கூடியிருந்த மக்கள் கோலாகலமாக கொண்டாடிய நிலையில், பாகிஸ்தான் வீரர்கள் அபிநந்தனுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் வீரர் ஒருவர் அபிநந்தனுடன் சேர்ந்து டீ அருந்தியதாகவும், பரிசுகள் வழங்கியதாகவும் தெரிகிறது.
அத்துடன் அவரது பிஸ்டல்கள் போன்றவை அபிநந்தனிடம் ஒப்படைக்கப்பட்டதாம்.
சர்வதேச நாடுகளின் அழுத்தத்தின் பேரிலேயே அபிநந்தனை பாகிஸ்தான் விடுவித்துள்ளதாக பேசப்படுகிறது.