பொதுவாக புரதச்சத்து நிறைந்த அசைவ உணவுகள் தான் உடல் எடை அதிகரிக்கும் என்ற எண்ணம் பெரும்பாலோருக்கு உண்டு. ஆனால் சைவ உணவுகளை தேர்ந்தெடுத்து உண்பதால் உடல் எடை அதிகரிக்கும்.
உருளைக்கிழங்கு
உருளைக்கிழங்கில், போதுமான அளவு கார்போஹைட்ரேட் உள்ளது. இதனை உணவில் அதிகமாக பயன்படுத்தினால், இதில் உள்ள மாவுச்சத்து கொழுப்பாக உடலில் படியும். அதிலும் அவித்த அல்லது வேக வைத்த உருளைக்கிழங்கை சாலட், சாண்ட்விச் மற்றும் இதர உணவுகளோடு சேர்த்து உண்ணும் போது, உடல் எடை அதிகரிக்கும்.
சேனைக்கிழங்கு
அதிக அளவு ஸ்டார்ச் கொண்டுள்ள மற்றொரு கிழங்காக சேனைக்கிழங்கு உள்ளது. இதனை அடிக்கடி சத்தான உணவோடு சேர்த்து சமைத்து சாப்பிட்டால், உடல் எடை அதிகரிக்கும்.
வேர்க்கடலை வெண்ணெய் (pea butter)
அதிக அளவில் மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு அமிலம் நிறைந்துள்ள இயற்கையான வேர்க்கடலை வெண்ணெய், உடல் ஆரோக்கியத்துக்கு பெரிதும் துணை புரிகிறது. அதிலும் அதனை பிரட் அல்லது பிஸ்கட்களில் தடவி உண்டால், உடல் எடையை அதிகரிக்கச் செய்யும்.
பாதாம் பருப்பு
பாதாம் என்பது நரம்பு வளர்ச்சிக்கு மிகவும் நல்லது . இதனை உடல் எடை கூடுவதற்கான ஆரோக்கியமான சில விஷயங்களுக்காகவும் பயன்படுத்தலாம். தினமும் ஒரு கை பாதாம் பருப்புகளை உண்ணுவதால், உடலின் செயல்பாடு பாதுகாக்கப்பட்டு, நரம்பு திடமாக செயல்படும்.
ஆளி விதை
ஆளி விதையில் அதிக அளவில் மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு அமிலம் அடங்கியுள்ளது. உடலை சீரான முறையில் செயல்பட உதவும். தினமும் போதுமான அளவு ஆளி விதையை உணவில் சேர்த்துக் கொண்டால், உடல் ஆரோக்கியம் கெடாமல் உடல் எடையை அதிகரிக்கும்.
முந்திரி
நல்ல உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், அதிகரிக்க தினசரி ஒரு கை முந்திரி பருப்பை சாப்பிடுங்கள். அதிலுள்ள புரதம் மற்றும் கொழுப்புகள் உடல் எடையை அதிகரிக்கச் செய்யும்.
வாழைப்பழம்
வேகமாக உடல் எடை அதிகரிக்க வேண்டுமானால், தினமும் இரண்டு அல்லது அதற்கு மேல் வாழைப்பழங்களை சாப்பிட வேண்டும். வாழைப்பழங்களில் சுக்ரோஸ் மற்றும் ப்ரக்டோஸ் சரியான விகிதத்தில் உள்ளது. இதில் உள்ள கார்போஹைட்ரேட்டுகள். உடனடி சக்தியை அளிப்பதோடு மட்டுமல்லாமல், உடல் எடை அதிகரிக்கவும் உதவி புரியும்.
உலர் திராட்சை
உலர் திராட்சை 100 கிராம் அளவில் 99 கலோரிகள் அடங்கியுள்ளது. ஒரு கை உலர் திராட்சையை சாப்பிட்டால், உடலுக்கு தேவையான ஆரோக்கியமான கலோரிகள் கிடைக்கும். இது உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைத்து, ஆரோக்கியமான கலோரிகளை அதிகரிக்கும். இதனால் வேகமாக உடல் எடை அதிகரிக்கும்.