சுவிட்சர்லாந்தில் 12 வார கர்ப்பிணி பெண்கள் கருக்கலைப்பு செய்து கொள்ளும் நிலை பெருகி வருவதாக ஆய்வு முடிவுகள் சுட்டிக்காட்டுகின்றன.
சர்வதேச அளவில் இதுபோன்ற கருக்கலைப்புகள் நடைபெற்று வருவது வாடிக்கை என ஆய்வுகள் சுட்டிக்காட்டினாலும்,
சுவிட்சர்லாந்தில் இது ஆண்டுக்கு 500 பேர் 12வது வார கருவை கலைப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
சூரிச் நகரில் அமைந்துள்ள பல்கலைக்கழக மருத்துவமனையில் பணியாற்றும் முதன்மை மருத்துவர் Tanja Krones இந்த விவகாரம் தொடர்பில் தெரிவிக்கையில், இது சர்வதேச அளவில் சாதாரணமக நடைபெற்றுவருவதுதான் என்றார்.
மேலும், பெண்கள் எவரும் 12 வார கர்ப்பத்தை கலைக்க முன்வரமாட்டார்கள். ஆனால் சில நேரம் வாழ்க்கை அவர்களை அந்த நிலைக்கு தள்ளிவிடும் என்றார்.
உளவியல் பாதிப்புக்கு உள்ளான தாய்மார்கள் அல்லது பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான பெண்கள் இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபட வாய்ப்பு உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மட்டுமின்றி சில பெண்கள் தாம் கர்ப்பமானதையே மிகவும் தாமதமாகவே தெரிந்து கொள்வார்கள் எனவும், அவர்களே இந்த முடிவுக்கு வருவதில் அதிகமானோர் எனவும் Tanja Krones குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பிறக்கவிருக்கும் குழந்தையின் உடல்நிலை குறித்து கவலைப்படும் பெண்களும் மருத்துவர்களின் உதவியுடன் கருக்கலைப்புக்கு முன்வரலாம்.
இது சில நேரங்களில் 20 வார கருவையும் கலைக்க சில பெண்கள் முன்வருவார்கள் என மருத்துவர் Tanja Krones தெரிவித்துள்ளார்.