சுவிட்சர்லாந்து வான் வெளியில் ஒரு விமானம் ஏடாகூடமாக பறந்ததையடுத்து ஒரு 20 ஆண்டு கால மாபெரும் மோசடி வெளியாகியுள்ளது.
William Chandler என்னும் அந்த நபர் 20 ஆண்டுகளாக மோசடி ஆவணங்கள் மூலம் தென் ஆப்பிரிக்க விமான நிறுவனத்தில் விமானியாக பணியாற்றி வந்தது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
தனது பணிக்காலம் முழுவதுமே William மோசடி ஆவணங்கள் மூலமாகத்தான் பணியாற்றிய நிலையில், தென்னாப்பிரிக்க விமான நிறுவனம் அவருக்கு அளிக்கப்பட்ட அனைத்து சலுகைகளையும் திரும்பப்பெற முடிவு செய்துள்ளது.
தனக்குப் பின் வந்தவர்கள் எல்லாரும் விமானிகளாகி விட்ட நிலையில், William மட்டும் விமானியாக பதவி உயர்த்தப்பட மறுக்கப்பட்டார்.
இதனால் மோசடி ஆவணங்கள் மூலம் அவர் விமானியாகிவிட்டார். தற்போது சிக்கியுள்ள நிலையில், மோசடி செய்து விமானியாகி அவர் எவ்வளவு சம்பாதித்துள்ளார் என விமான நிறுவனம் கணக்கிட்டு வருகிறது.
அது கிட்டத்தட்ட பல மில்லியன்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், தனது விமானி உரிமம் மோசடி மூலம் பெறப்பட்டது என்பது குறித்த தகவல் வெளியானதையடுத்து, William தனது பணியை ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது.
William மீது குற்றவியல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதோடு, தென்னாப்பிரிக்க விமான நிறுவனம் தனது ஊழியர்களின் ஆவணங்களை சரிபார்க்கும் நடவடிக்கையை இறுக்கமாகியுள்ளது.