சுரைக்காயில் தேன் கலந்து குடித்து பாருங்க.. நன்மைகள் ஏராளமாம்!

சுரைக்காய் உணவாகப் பயன்படும் ஒரு வெப்பமண்டல தாவரமாகும். இதில் அதிக நீர்சத்து உடையதால் அனைவரும் ஏற்ற காயாக உள்ளது.

அது நமது உடலின் ஒரு உறுப்பு போலவே கானப்படும். ஆமாம். கர்ப்பப்பை. இது தோற்றத்தில் மட்டுமல்ல, நிஜத்திலும் கர்ப்பப்பைக்கு வலு சேர்க்கக் கூடியது.

சுரைக்காயில் தேன் கலந்து செய்யப்படும் இந்த சுரைக்காய் ஜூஸ் குடிப்பதால் ஏராளமான நன்மைகள் உண்டாகும் என சொல்லப்படுகின்றது. தற்போது அவரை பார்ப்போம்.

தேவையானவை
  • சுரைக்காய்
  • தேன்
ஜூஸ் செய்யும் முறை

முதலில் சுரைக்காயை தோல் நீக்கி துண்டுகளாக்கி கொள்ளுங்கள்.

பின்னர் ஒரு டம்ளர் நீர் விட்டு அரைத்துக் கொள்ளுங்கள்

இறுதியாக இதனை வடிகட்டி அதனுடன் தேன் கலந்து குடிக்க வேண்டும். இதனை குடிப்பதால் உண்டாகும்.

வேறு நன்மைகள்
  • சுரைக்காய் ஜூஸ் அதிக நீர்ச்சத்து கொண்டது. இது கொழுப்புகளைக் குறைக்கும். வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும்.
  • சிறுநீர் பாதை மற்றும் சிறு நீரகத்தில் உண்டாகும் கிருமிகளை வெளியேற்றும். நச்சுக்களை அகற்றும். இதனல் உண்டாகும் சிறு நீரக தொற்றை குணப்படுத்த முடியும்.
  • சுரைக்காய் மற்றும் தேன் இரண்டுமே ரத்த அழுத்தத்தை குறைப்பவை. ஆரோக்கியமான ரத்த ஓட்டத்தை தூண்டச் செய்வதால் ஆரோக்கியம் மேம்படும்.
  • கர்ப்பப்பை பலவீனமாக இருப்பவர்கள் சுரைக்காயை வாரம் தவறாமல் சேர்த்துக் கொண்டால் உடலுக்கு பல நன்மைகளைத் தரும்.
  • இதில் தேவையான கால்சியம். இரும்பு சத்து, விட்டமின் இருப்பதால் கர்ப்பிணிகள் எடுத்துக் கொண்டால் கருவின் வளர்ச்சி நன்றாக இருக்கும். அளவு எவ்வளவு எடுத்துக் கொள்ள வேண்டுமென மருத்துவரிடம் ஆலோசனைப் பெற்று எடுத்துக் கொள்ளுங்கள்.
  • நரம்புகளில் உண்டாகும் இறுக்கங்களை போக்குகிறது. ஸ்ட்ரெஸ் ஹார்மோன் சுரப்பை கட்டுப்படுத்துகிறது.
  • கல்லீரலில் உண்டாகும் பிரச்சனைகளை சரிப்படுத்தும். வயிற்றில் உண்டாகும் புண்களை ஆற்றும். அல்சர் வராமல் தடுக்கும்.