இன்று இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான முதல் ஒருநாள் போட்டி பகல் இரவு ஆட்டமாக நடக்க உள்ளது. 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் இன்று ஐதராபாத்தில் தொடங்குகிறது.
இந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதற்காக கடந்த இது தினங்களாக இந்திய அணி வீரர்கள் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர்.
20 ஓவர் தொடரில் தோல்வியை தழுவிய இந்திய அணி, ஒரு நாள் தொடரில் பதிலடி கொடுக்கும் வேகத்துடன் களம் இறங்க உள்ளது.
இன்றைய ஆட்டத்தில் பங்கேற்கவுள்ள இந்திய அணி: ரோகித் சர்மா, ஷிகர் தவான், விராட் கோலி (கேப்டன்), அம்பத்தி ராயுடு அல்லது லோகேஷ் ராகுல், கேதர் ஜாதவ், டோனி அல்லது ரிஷாப் பான்ட், விஜய் சங்கர், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி.
ஆஸ்திரேலியா அணி: ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), உஸ்மான் கவாஜா, பீட்டர் ஹேன்ட்ஸ்கோம்ப், மார்கஸ் ஸ்டோனிஸ், மேக்ஸ்வெல், ஆஷ்டன் டர்னர், அலெக்ஸ் காரி, ஆடம் ஜம்பா, கம்மின்ஸ், ஜாசன் பெரேன்டோர்ப், ஜெயே ரிச்சர்ட்சன்.
இந்நிலையில், முதல் ஒரு நாள் போட்டியில் காயம் காரணமாக தோணி களமிறங்குவது கேள்விக்குறியாகியுள்ளது. நேற்று தோணி வலைப்பயிற்சி மேற்கொண்டிருந்த போது அணியின் சப்போர்ட் ஸ்டாஃப் ராகவேந்த்ரா வீசிய பந்து டோனியின் வலது கையில் தாக்கியதில், கடுமையாக வலி ஏற்பட்டு பயிற்சியை முடித்து கொண்டார்.
எனவே தோணி இன்றைய ஆட்டத்தில் பங்கேற்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இருப்பினும் இது குறித்து அணி நிர்வாகம் எந்த தகவலையும் இதுவரை தெரிவிக்கவில்லை. தோணி காயம் காரணமாக பங்கேற்கவில்லை எனில் இந்திய ரசிகர்கள் பெரும் ஏமாற்றத்துக்கு உள்ளவர்கள். மேலும், தோனியின் ஆட்டத்தை பார்க்கவே ஒரு ரசிகர் பட்டாளம் இருப்பதை யாரும் மறுக்க முடியாது.
உலக கோப்பை நெருங்கி வரும் வேளையில், இன்று தொடங்க உள்ள இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான ஒரு நாள் தொடர் மிக முக்கியம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஒருவேளை தோணி இன்றைய போட்டியில் பங்கேற்காவில்லை எனில் அவருக்கு பதிலாக ரிஷப் பந்த் விக்கெட் கீப்பராக இறக்கப்படுவார் என்று தெரிகிறது.