இந்தியாவில் குறிக்க காலத்தில் அதிக வாடிக்கையாளர்களை கொண்டுள்ள நிறுவனம் ஜியோதான். ஜியோ நிறுவனம் முதலில் இருந்து இதுவரை அதிரடி சலுகையை வழங்கி வருகிறது. அதேபோல் தற்பொழுது ஒரு புதிய ப்ரீபெய்ட் திட்டத்தை ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது.
ரூ.149 என்ற விலையில் புதிய ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இதன்படி தனது பயனர்களுக்குத் தினமும் 1.5 GB 4G டேட்டா, இலவச வீடியோ கால் சேவை மற்றும் 100 அன்லிமிடெட் எஸ்.எம்.எஸ்-கள் என 28 நாட்கள் வேலிடிட்டியுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ரூ.349 என்ற விலையில் புதிய ப்ரீபெய்ட் திட்டத்தின் படி தனது பயனர்களுக்குத் தினமும் 1.5 GB 4G டேட்டா, இலவச வீடியோ கால் சேவை மற்றும் 100 அன்லிமிடெட் எஸ்.எம்.எஸ்-கள் என 70 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்பட்டுள்ளது.
ரூ. 399 ப்ரீபெய்ட் திட்டத்தின் படி தனது பயனர்களுக்குத் தினமும் 1.5 GB 4G டேட்டா, இலவச வீடியோ கால் சேவை மற்றும் 100 அன்லிமிடெட் எஸ்.எம்.எஸ்-கள் என என 84 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்பட்டுள்ளது.
ரூ.449 ப்ரீபெய்ட் திட்டத்தின் கீழ் ஜியோ பயனர்கள் அன்லிமிடெட் ஹை-ஸ்பீட் இன்டர்நெட் சேவை, அன்லிமிடெட் வாய்ஸ் கால் மற்றும் அன்லிமிடெட் எஸ்.எம்.எஸ் என அனைத்தையும் 91 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்பட்டுள்ளது.
ரூ. 1,699 ப்ரீபெய்ட் திட்டத்தின்படி ஜியோ பயனர்கள் அன்லிமிடெட் ஹை-ஸ்பீட் இன்டர்நெட் சேவை, அன்லிமிடெட் வாய்ஸ் கால்லிங் மற்றும் அன்லிமிடெட் எஸ்.எம்.எஸ் என அனைத்தையும் 365 நாட்கள் வேலிடிட்டியுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.