வீட்டில் அன்றாடம் பயன்படுத்தும் குக்கரை., உபயோகம் செய்யாத நேரத்தில் மூடி வைப்பதை தவிர்க்கவும்.
குளிர்சாதன பெட்டி இல்லாத இல்லங்களில் இட்லி மாவு மற்றும் தோசை மாவை புளித்து போகாமல் பார்ப்பதற்காக மாவை பிளாஸ்டிக் பாத்திரத்தில் போட்டு மூடி வைத்தால் மாவு சீக்கிரம் புளிக்காது.
காய்கறிகளை ஈரத்துணியை போட்டு மூடி வைப்பதன் மூலமாக காய்கறிகள் எளிதில் விடுவதில் இருந்து தப்பிக்க இயலும்.
சில மரத்தினால் ஆன பொருட்களை கரையான் அரிக்காமல் பாதுகாப்பதற்கு., அந்த பொருளின் மீது கற்பூரத்தை தூவி வந்தால் கரையான் எளிதில் அரிக்காது.
வெள்ளி ஆபரணங்களை பீரோவில் வைக்கும் சமயத்தில் சிறிதளவு கற்பூரத்தை பொடியை தூவி வைத்தால் கரை படியாது.
வாரத்திற்கு ஒரு முறை அல்லது அசைவ உணவுகள் சமைக்கும் நேரத்தில் பாத்திரத்தில் வீசும் துர்நாற்றத்தை போக்குவதற்காக புளியை கொண்டு சுத்தம் செய்து., பின்னர் வழக்கம் போல சோப்பை பயன்படுத்தி கழுவினால் அசைவ நாற்றம் இருக்காது.
தினமும் இல்லத்தில் பயன்படுத்தப்படும் இஞ்சியை ஈரத்துணியால் சுற்றி தண்ணீர்குடத்தின் மீது வைத்தால் 10 நாட்கள் ஆனாலும் இஞ்சி காயது.
நன்கு காய்ந்த எலுமிச்சை பழத்தின் தோல் மற்றும் ஆரஞ்சு பழத்தின் தோலை அலமாரியில் வைத்தால் பூச்சிகள் வராது.
கடைகளில் விற்பனை செய்யப்படும் மூக்குப்பொடியை வாங்கி., எறும்புகளின் புற்றின் மீது சிறிதளவு நீர் சேர்த்து ஊற்றினால் எறும்புகள் அனைத்தும் இருக்காது.
குழந்தைக்கு சூப் வகைகள் தரும் நேரத்தில்., முந்திரியை நெய்யில் வறுத்து தந்தால் அவர்கள் சூப்பையும்., முந்திரி பருப்பையும் விரும்பி உண்ணுவார்கள்.