பெப்பர் காளான் சாதம் செய்வது எப்படி.!

பெரும்பாலான இல்லங்களில் விதவிதமான உணவுகளை செய்து தருகிறோம் என்று வாரத்திற்கு ஒரு முறை மீன் அல்லது இறைச்சியை எடுத்து பொறியல்., குழம்பு., பொடிமாஸ்., மசாலா மாஸ் என்று பல பெயரில் தயாரித்து சலிப்படைய வைத்துவிடுவார்கள். அந்த வகையில்., வித்தியாசமான மற்றும் சுவையான காளான் சாதம் செய்வது எப்படி என்பதை காண்போம்.

காளான் சாதம் செய்ய தேவையான பொருட்கள்:

வடித்த சாதம் – 2 கிண்ணம்.,
வெங்காயம் – 2 எண்ணம்.,
தக்காளி – 1 எண்ணம்.,
பச்சை மிளகாய் – 1 எண்ணம்.,
மிளகு தூள் – 1 தே.கரண்டி.,
காளான் – 200 கிராம்.,
எண்ணெய் மற்றும் உப்பு – தே.அளவு.,
கொத்தமல்லி – சிறிதளவிற்கு…

காளான் சாதம் செய்முறை:

எடுத்துக்கொண்ட வெங்காயம்., கொத்தமல்லி., பச்சை மிளகாய் மற்றும் தக்காளியை பொடிப்பொடியாக நறுக்கி எடுத்துக்கொள்ளவும்.

காலனை நன்கு சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக வெட்டி எடுத்து கொள்ளவும்.

வானெலியில் சிறிதளவு எண்ணையை ஊட்டி., கடுகு., உளுந்து போட்டு தாளித்து., வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை சேர்த்து பொன்னிறமாக மாறும் வரை வதக்க வேண்டும்.

பின்னர் உப்பு சேர்த்து வதக்கிய பின்னர் தக்காளியை சேர்த்து வதக்கி எடுக்க வேண்டும். பின்னர் வானெலியில் மிளகு தூளை தூவி வதக்கிவிட்டு., தண்ணீரை சேர்த்து காளானை வேக வைக்க வேண்டும்.

காளான் வெந்த பின்னர் நீர் வற்றியது., சாதத்தை போட்டு பிரட்டி சுமார் 5 நிமி. கழித்து இறக்கினால் சூடான சுவையான காளான் சாதம் ரெடி.