பாகிஸ்தான் மக்களுக்கு இந்திய போலீஸ் செய்த உணர்ச்சி மிகுந்த சம்பவம்!!

காஷ்மீரில் நடந்த புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், கடந்த மாதம் 26 ஆம் தேதி அன்று 12 மிராஜ் 2000 போர் விமானங்கள் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகமங்கள் மீது வெடின்குண்டுகளை வீசி தரைமட்டமாக்கியது.

அன்று நடந்த தாக்குதலில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் மிகப்பெரிய முகமும் அழிக்கப்பட்டது. இந்திய இராணுவம் நடத்திய இந்த தாக்குதலில் 300 க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

கடந்த 27ம் தேதி இந்திய எல்லைக்குள் நுழைந்து தாக்குதல் நடத்த முயன்ற பாகிஸ்தான் விமானப்படையை இந்திய விமானப்படையினா் பதிலடி கொடுத்து விரட்டியடித்தனர். இதனால் இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் போர் பதட்டம் நிலவுகிறது.

பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டுள்ளது. தற்போது இரு நாடுகளுக்கும் இடையே பதட்டம் நிலவுவதால் இந்த ரெயில் நிறுத்தப்படுவதாக திடீரென நேற்று பாகிஸ்தான் அரசு அறிவித்தது.

இதைத்தொடர்ந்து கராச்சியில் இருந்து புறப்பட்ட ரயில் லாகூர் வரை வந்தது. அந்த ரயிலில் இந்தியாவுக்கு பயணம் செய்த 16 பாகிஸ்தான் பயணிகள் இருந்துள்ளனர். இருந்தும் அடுத்த அறிவிப்பு வரும் வரை சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படாது என பாகிஸ்தான் ரயில்வே அதிகாரிகள் அறிவித்தனர்.

நடுவழியில் தவித்த பயணிகள் அட்டாரி ரயில் நிலையத்துக்கு வெளியே ஆதரவற்ற நிலையில் தவித்தபடி நின்றனர். அட்டாரி இந்தியாவின் பஞ்சாப் தலைநகர் அமிர்தசரஸ் அருகே உள்ளது. இதுபற்றி தகவல் அறிந்ததும் அங்கு சென்ற இந்திய போலீசார் அவர்களுக்கு உணவு வழங்கி உபசரித்தனர்.