தாயகம் திரும்பிய அபிநந்தன் உணர்ச்சிப்பூர்வமாக கூறிய முதல் வார்த்தை!

காஸ்மீரில் நடந்த புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், கடந்த மாதம் 26 ஆம் தேதி அன்று 12 மிராஜ் 2000 போர் விமானங்கள் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகமங்கள் மீது வெடின்குண்டுகளை வீசி தரைமட்டமாக்கியது.

அன்று நடந்த தாக்குதலில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் மிகப்பெரிய முகமும் அழிக்கப்பட்டது. இந்திய இராணுவம் நடத்திய இந்த தாக்குதலில் 300 க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

கடந்த 27ம் தேதி இந்திய எல்லைக்குள் நுழைந்து தாக்குதல் நடத்த முயன்ற பாகிஸ்தான் விமானப்படையை இந்திய விமானப்படையினா் பதிலடி கொடுத்து விரட்டியடித்தனா். இந்த தாக்குதலில், இந்தியா விமானி அபிநந்தனை பாக்கிஸ்தான் ராணுவம் கைது செய்தனர்.

இதனையடுத்து, அவரை மீட்க இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்த நிலையில், நேற்று மாலை வாகா எல்லையை வந்தடைந்தார் விமானப்படை அதிகாரி அபிநந்தன். பின்னர், இந்திய அதிகாரிகளிடம் அபிநந்தன் ஒப்படைக்கப்பட்டார்.

அபிநந்தன் இந்திய தூதரக அதிகாரிகளின் துணையுடன் இந்திய எல்லைக்குள் காலடி எடுத்து வைத்தார். இந்திய எல்லைக்குள் காலடி எடுத்து வைத்தவுடன் அபிநந்தன் கூறிய முதல் வார்த்தை “தாயகம் திரும்பியதில் மகிழ்ச்சி” என்பதுதான். இதனை அமிர்தசரஸ் துணை காவல் ஆணையர் ஷிவ் துளர் சிங் திலோன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.