தமிழக அரசியலில் திடீர் திருப்பம்.! வைகோ, திருமா விரட்டியடிப்பு.!

வரும் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு, நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள் யார் யாருடன் கூட்டணி வைத்தால் வெற்றி பெறலாம் என்ற நோக்கத்தில், கூட்டணி பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றன.

கடந்த பாராளுமன்றத் தேர்தலை போல், வரும் பாராளுமன்றத் தேர்தல் இருக்காது என்றும், இந்த முறை தேசிய கட்சிகளான பாஜகவுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவும் என்றும், மூன்றாவதாக ஒரு அணிய அமைய வாய்ப்பு உள்ளதாகவும் அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும், மாநில கட்சிகளின் வெற்றி என்பது வரும் பாராளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும் என்றும், பிரதமரை தேர்ந்தெடுக்க கூடிய இடத்தில் மாநிலக் கட்சிகள் இருக்கலாம் என்றும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், தமிழகத்தில் அதிமுக தலைமையிலான மாபெரும் கூட்டணி ஒன்று அமைந்துள்ளது. அதிமுக கூட்டணியில் பாஜக. பாமக. புதிய தமிழகம். புதிய நீதிக் காட்சிகள் கூட்டணி உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

மேலும், இந்த கூட்டணியில் தேமுதிக, தமிழ் மாநில காங்கிரஸ் இன்னும் சில கட்சிகள் இணையலாம் என்றும் கருதப்படுகிறது. இதில், தேமுதிக இன்னும் ஓரிரு நாட்களில் அதிமுகவுடன் இணைய வாய்ப்புள்ளதாகவே தெரிகிறது. அதேபோல் தமிழ் மாநில காங்கிரஸ் ஓரிரு நாட்களில் அதிமுக கூட்டணியில் இணைய 100 சதம் வாய்ப்புள்ளதாகவே தெரிகிறது.

இதேபோல் தமிழகத்தில் எதிர்க்கட்சியாக உள்ள திமுக, காங்கிரஸ் உடன் சேர்ந்து கூட்டணி அமைத்துள்ளது. திமுக கூட்டணியில் காங்கிரஸ், இந்திய முஸ்லீம் லீக் கட்சி கூட்டணி உடன்பாடு ஏற்பட்டு, தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

மேலும், திமுகவின் தோழமை கட்சிகளான ம.தி.மு.க. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் கட்சி உள்ளிட்ட கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

இதற்கிடையே இன்று இந்திய ஜனநாயகக் கட்சியின் தலைவர் சென்னை அறிவாலயத்திற்கு சென்று திமுக தலைவர் மு க ஸ்டாலினை நேரில் சந்தித்து, திமுகவின் கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், திமுக கூட்டணியில் தேமுதிக இணையவில்லை என்பதை தெரிந்து கொண்ட வைகோ மற்றும் திருமாவளவன், அதிக தொகுதிகள் கேட்டதாகவும், இதனால் அதிர்ச்சி அடைந்த திமுக தலைமை, கூட்டணி பேச்சுவார்த்தைக்கு திருமாவளவனையும் வைகோவையும் வரவேண்டாம் என்று விரட்டி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னதாக, விடுதலை சிறுத்தை கட்சி மட்டும் 3 தொகுதிகளை கேட்டு உள்ளது. காஞ்சிபுரம், சிதம்பரம், விழுப்புரம் தொகுதிகளில் விசிக போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளது. இந்த மூன்று தொகுதிகளும் தனி தொகுதிகள் என்பதால் விசிக இதனை தேர்ந்தெடுத்துள்ளதாக தெரிகிறது.

செய்தியாளர்களுக்கு திருமாவளவன் அளித்துள்ள பேட்டியில், ”நாங்கள் போட்டியிட வேண்டிய தொகுதிகளின் விருப்ப பட்டியலை தி.மு.கவிடம் கொடுத்துள்ளோம். நானும் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிட உள்ளேன்” என்று அதனை உறுதிசெய்துள்ளார்.

அதேபோல், மதிமுக பொது செயலாளர் வைகோ அவர்கள் 4 தொகுதிகள் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது, அதில், திருச்சி, தென்காசி, காஞ்சிபுரம், ஈரோடு உள்ளிட்ட தொகுதிகளை மதிமுக கேட்டுள்ளதாக தெரிகிறது.

எது எப்படியானாலும், கடைசியில் வேறு வழியின்றி திருமாவளவனுக்கும், வைகோவிற்கும் ஒரு சீட்டு நிலை தான் வரும்.

தற்போது நிலவரப்படி, தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரசுக்கு புதுச்சேரி உள்பட 10 தொகுதிகளும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும்,

மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சிக்கு 2 தொகுதிகள்,

ம.தி.மு.க – 1 தொகுதிகள்,

விடுதலைச் சிறுத்தைகள் – 1 தொகுதிகள்,

இந்திய கம்யூனிஸ்டு – 1 தொகுதிகள்,

மனித நேய மக்கள் கட்சி – 1 தொகுதிகள் ஒதுக்கப்படலாம் என்றும் 23 தொகுதிகளில் திமுக போட்டியிடும் என்றும் தகவல் கிடைத்துள்ளது.