அவல் என்றாலே உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும். வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு இது தான் சரியான தேர்வாகும். அதிலும், சிவப்பு அவல் என்றால் மிகவும் ஸ்பெஷல். அதை வைத்து எப்படி உப்மா செய்யலாம் என பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
சிவப்பு அவல் – 1 கப்,
நல்லெண்ணெய், உப்பு – தேவையான அளவு,
வெங்காயம் – 2
காய்ந்தமிளகாய் – 2,
கறிவேப்பிலை – சிறிது,
தேங்காய்த்துருவல் – 2 டேபிள்ஸ்பூன்.
தாளிக்க:
கடுகு,
உளுத்தம்பருப்பு,
கடலைப்பருப்பு.
செய்முறை :
- அவலை நன்றாக கழுவி ஊறவைக்கவும். பின்னர் தண்ணீரோ வடித்து எடுத்து கொள்ளவும். வெங்காயத்தை பொடிப்பொடியாக நறுக்கி கொள்ளவும்.
- வாணலியில், எண்ணெய் விட்டு கடுகு, உளுந்து, போட்டு தாளித்து கடலைப்பருப்பு, கிள்ளிய காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கவும்.
- பின்னர், வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்கவும். பின்னர் அதனுடன் அவலை சேர்த்து கிளறி அதனுடன் உப்பு சேர்க்கவும்.
- பின்னர் கொஞ்சம் தண்ணீர் விட்டு கிளறி வாணலியை மூடி வேக வைக்கவும். 5 நிமிடம் வேகவைத்து பின்னர் தேங்காய் துருவல் இட்டு உடனே அடுப்பை அணைத்து விடவும்.
- மீண்டும் ஒரு முறை கிளறி விட்டு பரிமாறவும். மணமணக்கும் அவல் உப்மா தயார்.