புல்வாமா தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய எல்லையில் அமைந்துள்ள பாலகோட் பகுதியில் காலை 3 மணியளவில் இந்திய இராணுவம் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியது தொடர்பான சாட்டிலைட் படங்கள் மற்றும் சுகோய் 30 விமானத்தில் இருந்து எடுக்கப்பட்ட படங்கள் இலக்கை துல்லியமாக தாக்கி அழித்ததை உறுதி செய்துள்ளன.
கடந்த மாதம் 26 ஆம் திகதி ஜெய்ஷ்-இ-முகமது முகமது இயக்கத்தை சேர்ந்த தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக இந்திய இராணுவனத்தினருக்கு கிடைத்த தகவலையடுத்து, அதிரடியாக தாக்குதல் நடத்தப்பட்டு தீவிரவாத முகாம் அழிக்கப்பட்டது.
கணினி மூலம் இயக்கப்பட்ட ஸ்பைஸ் 2000 குண்டுகளை பாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள் மீது இந்திய விமானங்கள் வீசித் தாக்கிய காட்சிகள் சாட்டிலைட் மூலம் பதிவாகியுள்ளன.
குண்டுவெடிப்புக்கு முன்னும் பின்னும் இருந்த காட்சிகள் படம் பிடிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த குண்டுகள் அந்த கட்டடத்தில் இருந்தவர்களை அதிர்ச்சிகரமான மரணத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் விளக்கியுள்ளனர்.
கார்கில் போருக்குப் பின் முதன்முறையாக தற்போதுதான் ஆக்ரமிப்பு காஷ்மீரைத் தாண்டி பாகிஸ்தானின் வான் பரப்புக்குள் இந்திய விமானங்கள் ஊடுருவி தாக்கியுள்ளன.
இந்திய பாதுகாப்பு துறை அதிகாரிகள் விளக்கப்படுத்தியுள்ள நிலையில், தாக்குதுல் நடத்திய விவகாரத்தை ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தின் தலைவர் மசூத் அசாரின் இளைய சகோதரர் மவுலானா அமர் நேற்று நடைபெற்ற ஒரு கூட்டத்தில் ஒப்புக்கொண்டுள்ளார்.