தொலைக்காட்சி சேனல்களை டிஜிட்டல் முறையில் ஒளிபரப்பாதகேபிள் ஆபரேட்டர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், மத்திய அரசின் தகவல் மற்றும் தொலைத்தொடர்புத் துறை அமைச்சகம் நாடு முழுவதும் டிஜிட்டல் ஒளிபரப்பு மூலம் தொலைக்காட்சி சேனல்களை ஒளிபரப்பு செய்ய வேண்டுமென ஆணை பிறப்பித்துள்ளது.
தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம், மத்திய அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்திடமிருந்து ஒளிபரப்பு உரிமம் பெற்று அனைத்து மாவட்டங்களிலும் கடந்த 1-9-2017 முதல் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி சந்தாதாரர்களுக்கு விலையில்லா செட்டாப் பாக்ஸ் வழங்கி டிஜிட்டல் சேவையை வழங்கி வருகிறது.
கேபிள் டிவி ஒழுங்குமுறை சட்டம் 1995, சட்டப்பிரிவு 4 (3)-ன்படிஉள்ளூர் கேபிள் டிவி ஆப்பரேட்டர்கள் அனலாக் சிக்னலை முற்றிலும்தவிர்த்து டிஜிட்டல் சிக்னலாக மட்டுமே ஒளிபரப்ப வேண்டும்.
மேற்படி சட்டத்தின் பிரிவு 4-ன்படி அறிவிக்கை வெளியிடப்பட்ட நாள் முதல் அனலாக் சிக்னல் முற்றிலும் நிறுத்தம் செய்யப்பட்டு டிஜிட்டல் முறையில் மட்டுமே டிவி சிக்னல் ஒளிபரப்பப்பட வேண்டும்.
அவ்வாறு டிஜிட்டல் முறையில் சிக்னல் வழங்காமல் அனலாக் முறையில் சிக்னல் வழங்குவோர் மீது சட்டப்பிரிவு 11-ன்படி அனலாக் சிக்னல் வழங்கும் ஆப்பரேட்டர்களின் உபகரணங்கள் பறிமுதல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.