சென்னையில் காதலித்து திருமணம் செய்துகொண்ட பெண் ஒருவர் ஏற்கனவே தன்னுடைய கணவருக்கு இரண்டு குழந்தைகள் இருப்பதை தெரிந்துகொன்டு பெரும் அதிர்ச்சியடைந்துள்ளார்.
சென்னையை சேர்ந்த நரசிம்மராவ் (32) தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் அதே நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் 25 வயது இளம்பெண்ணுடன் சிரித்து பேசி வந்துள்ளார்.
நாளடைவில் இருவருக்குள்ளும் காதல் மலர்ந்துள்ளது. இதனையடுத்து அலைபாயுதே பட பாணியில் பதிவு திருமணம் செய்துகொண்டு, அவரவர் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளனர்.
சிறிது நாட்கள் கழித்து அந்த இளம்பெண் தனக்கு திருமணம் நடந்துவிட்டதை பற்றி பெற்றோருக்கு தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் ஆரம்பத்தில் எதிர்த்தாலும், அதன் பிறகு வரவேற்பு நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்துள்ளனர்.
அதற்கான வேளைகளில் ஈடுபடும் நேரத்தில் திடீரென நரசிம்மராவ் மாயமாகியுள்ளார். இதுதொடர்பாக இளம்பெண்ணின் பெற்றோர் விசாரணை மேற்கொள்ளும்போது, நரசிம்மராவிற்கு ஏற்கனவே திருமணம் முடிந்து 2 குழந்தைகள் இருப்பது தெரியவந்துள்ளது.
பின்னர் இதுகுறித்து பாதிக்கப்பட்ட இளம்பெண் பொலிஸாரிடம் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் வழக்கு பதிவு செய்த பொலிஸார், நரசிம்மராவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.