மசாஜ் நிலையம் என்ற பெயரில் பாலியல் தொழில் விடுதி!

திருகோணமலை – அலஸ்தோட்டம் பகுதியில் அனுமதியின்றி இயங்கி வந்த மசாஜ் நிலையத்தை சேதமாக்கிய குற்றச்சாட்டின் பேரில் மூன்று சந்தேகநபர்கள் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதே பகுதியை சேர்ந்த 25 வயதிற்கும் 42 வயதுக்கும் உட்பட்டவர்கள் என விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக உப்புவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அலஸ்தோட்ட பகுதியில் மசாஜ் நிலையம் என்ற பெயரில் பாலியல் தொழில் விடுதி நடத்தப்பட்டு வந்த நிலையில் இதனை சகிக்க முடியாத சமூக தொண்டர்கள் அந்த நிலையத்தை தாக்கியுள்ளதாக தெரியவருகிறது.

இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இன்று திருகோணமலை நீதிமன்ற பதில் நீதவான் வாசஸ்தலத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.