அம்பலமான உண்மை முகம்!

புல்வாமா தாக்குதல் நடத்திய ஜெய்ஷ்-இ-முகமது முகமது தீவிரவாத இயக்கத்துக்கு பாகிஸ்தான் நாட்டு பிரிவினைவாத தலைவர்களிடம் இருந்து பண உதவி செய்யப்பட்டுள்ளதாக தேசிய புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.

பிப்ரவரி 14 ஆம் திகதி காஷ்மீரில் புல்வாமா மாவட்டத்தில் ஜெய்ஷ்-இ-முகமது முகமது தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த தீவிரவாதி ஒருவன் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 40 இந்திய சிஆர்பிஎப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர், 4 பேர் காயமடைந்தனர்.

இதற்கு பதிலடியாக பாலகோட் பகுதியில் அமைந்திருந்த தீவிரவாத முகாம் மீது இந்திய விமானப்படை குண்டு வீசி தாக்குதல் நடத்தி அழித்தது.

புல்வாமா தாக்குதல் குறித்து தேசிய புலனாய்வு அமைப்பு தொடர் விசாரணை நடத்தி வந்த நிலையில், இந்த தாக்குதலுக்கு பண உதவி பாகிஸ்தான் நாட்டின் சில பிரிவினைவாத தலைவர்களிடம் இருந்து வழங்கப்பட்டுள்ளது என தெரியவந்துள்ளது.

அதாவது துபாய் வழியாக பாகிஸ்தான் நாட்டிடம் இருந்து இந்த ஹாவால பணப்பறிமாற்றம் தீவீரவாதிகளுக்கு சென்றுள்ளது. குறிப்பாக இந்த தற்கொலைப்படை தாக்குதலை நடத்திய Adil Dar என்ற தீவிரவாதி உட்பட 7 தீவிரவாதிகளுக்கு பணபறிமாற்றம் நடந்துள்ளது.

சதித்திட்டத்தில் ஈடுபட்டுள்ள சில பிரிவினைவாதிகள் கைது விரைவில் நடக்கக்கூடும் என்று ஆதாரங்கள் தெரிவித்துள்ளன, மேலும் பிரிவினைவாதிகளில் சிலர் இன்னும் காவல்துறை பாதுகாப்புடன் உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஷ்மீர் அரசியல்வாதி Mirwaiz வீட்டிற்கு அருகே ஹைடெக் இண்டர்நேஷனல் கம்யூனிகேஷன் முறை நடந்துள்ளது தெரியவந்துள்ளது. இன்னும் சில தலைவர்கள் சந்தேகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

சுமார் 40 பிரிவினைவாத தலைவர்களின் வங்கி கணக்குகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ள என தேசிய புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.